உடலுறவின்போது ஆண்கள் கவனிக்கும் 4 விஷயங்கள் என்னனு தெரியுமா?

First Published | Mar 29, 2023, 6:39 PM IST

துணையுடன் உறவு கொள்ளும் போது ஆண்கள் கவனிக்கும் 4 விஷயங்கள் அந்த உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 

மனிதனின் வாழ்க்கையில் காமம் பின்னி பிணைந்துள்ளது. காமம் இல்லாமல் ரொம்ப காலம் வாழ்வது தவம் போன்றது. உடலுறவு மனிதனுக்கு கட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதிலும் பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள் பல விஷயங்களை கவனிப்பார்கள். அதாவது படுக்கையில் இருக்கும் காதலி/ மனைவியிடம் இருக்கும் சில விஷயங்கள் ஆண்கள் ஈர்க்கிறது. அவை சின்னஞ்சிறு விஷயங்கள்தான். அப்படி என்ன ஆண்களின் கவனத்தை ஈர்க்கிறது என்பதை இங்கு காணலாம். 

உடலுறவு வைத்து கொள்ளும்போது தங்கள் துணையின் உடல் எவ்வாறு அசைகிறது என்பதை ஆண்கள் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு தொடுதலுக்கும் பெண்களின் உடல் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து, அதற்கு ஏற்றார் போல அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கிறார்கள். தங்கள் துணையின் உடலுடன் முடிந்தவரை நெருக்கமாக இருக்க ஆண்கள் விரும்புகிறார்கள். உடலுறவின் போது அசௌகரியமாக பெண்கள் உணர்வதை ஆண்கள் விரும்புவதில்லை. செக்ஸ் வைத்து கொள்ளும் போது பெண்களின் உடல் மிகவும் கடினமாகவும், சங்கடமாகவும் உணரும்போது, அதை காணும் ஆண்கள் கொஞ்சம் அதிருப்தி அடைகிறார்கள். 


செக்ஸ் வைத்து கொள்ளும் போது ஆண்கள் தங்கள் துணையின் கண்களை கவனிக்கிறார்கள். அந்த கண்களின் வழியாக எல்லா வகையான எண்ணங்களையும் அறிய துடிக்கிறார்கள். அப்போது ஆண்களின் தலையில் பல கேள்விகள் சுழல்கின்றன. தன் நிர்வாண உடலை அவள் விரும்புவாளா? அவளுக்கு பிடிக்குமா? அவள் என்னை ரசிக்கிறாளா? சும்மா பார்க்கிறாளா? என பெண்களின் கண்களைப் பார்த்து அவர்களின் உடல் மொழியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.  

ஆண்கள் கவனிக்கும் மற்றொரு விஷயம், தங்கள் துணையின் குரல். அவர்களின் குரல் உறவுக்கு பின் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் உறவில் திருப்தியாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். கொஞ்சம் மூச்சு திணறியபடி இருந்தால் சோர்வு என புரிந்துகொள்கிறார்கள். பெண்கள் உற்சாகமாக பேசுவது ஆண்களுக்கு இன்னொரு சிக்னலை கொடுக்கும். அதாவது, அவர்கள் அந்த விஷயத்திற்கு ரெடி என்பதுதான் அது. 

இதையும் படிங்க: ஆண்களின் விரைப்பை, விந்தணுவில் பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

உடலுறவின் போது தங்கள் துணை எப்படிப்பட்ட உள்ளாடைகளை அணிந்துள்ளார் என்பதை ஆண்கள் கவனிக்கிறார்கள். உடலுறவுக்கு தயாராகும் பெண், பழைய அல்லது துவைக்காத உள்ளாடைகள் அணிந்திருந்தால் அவளுக்கு அந்த உறவில் எந்த ஈடுபாடும் இல்லை. அவள் தனிப்பட்ட முயற்சி ஏதும் செய்யவில்லை என புரிந்து கொள்ளப்படுகிறது. இப்படி எல்லா ஆண்களும் நினைக்கிறார்கள் என்றில்லை. ஆனால் உறவு கொள்ளும் போது கவர்ச்சியான ஆடைகளை பெண்கள் அணிந்தால் ஆண்கள் அதை ரொம்ப விரும்புகிறார்கள்! உள்ளூர ரசிக்கிறார்கள். 

இதையும் படிங்க: பெண்கள் ஏன் ப்ரபோஸ் பண்றதில்ல தெரியுமா?

Latest Videos

click me!