ஆண்களே! ப்ளீஸ் செக்ஸ் வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க!

First Published | May 3, 2023, 6:16 PM IST

ஆண்களின் பாலியல் செயல்திறன் குறைந்துவிட்டதாக அவர்களே நினைக்கும்போது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

காதலின் அடுத்த கட்ட நகர்வாக காமம் இருக்கிறது. இருவரின் மனதை காதல் எந்த அளவுக்கு இணைக்கிறதோ, அதேபோலவே காமம் அவர்களின் உடலை இணைக்கிறது. ஆனால் புதுமண தம்பதிகளுக்கு பாலியல் உறவின் போது சில சிக்கல்கள் ஏற்படும். சில ஆண்களுக்கு உடலுறவில் எந்த முன் அனுபவங்களும் இல்லாமல் இருப்பதால், தங்களுடைய மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு பாலுறவில் இருக்கும் ஆர்வமே முற்றிலும் குறைந்து விடும். ஆண்கள் பாலுறவில் செய்யும் 5 விஷயங்கள் அவர்களை மோசமானவர்களாக காட்டுகிறது. 

ஆண்மை பலம் 

ஆண்களில் சிலர் தங்களுக்கு உடலுறவு கொள்ளும் போது விறைப்பு தன்மைகள் பிரச்சனை ஏற்படுமோ என்ற பதற்றத்தில் இருக்கின்றனர். இப்படியான பதற்றத்தில் இருப்பதால் உடலுறவில் அவர்களால் சரியாக செயல்பட முடியாமல் மனைவிக்கு அதிருப்தியை அளிக்கின்றனர். அவர்களும் விரக்தி அடைகின்றனர். சில ஆண்கள் தங்களுடைய விறைப்புத்தன்மை, ஆணுறுப்பு அளவு ஆகியவை குறித்த தயக்கத்தால் உடலுறவு கொள்வதையே தவிர்க்கின்றனர். 


Image: Getty

சுயநலம் 

சில ஆண்கள் உடலுறவில் இன்பத்தை பெறுவதில் தங்கள் துணையின் விருப்பத்தை விட தங்களுடைய விருப்பத்தை தான் முக்கியமாக கருதுவார்கள். இப்படி தன்னுடைய பாலியல் இன்பத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் உடலுறவில் ஆர்வமில்லாமல், அந்த விஷயத்தை வெறுத்துவிடுகின்றனர். 

உடலுறவில் சில்மிஷம் 

உடலுறவில் உச்ச கட்டத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை தாம்பத்தியத்தின் போது முன் விளையாட்டு முக்கியமான செயல்பாடு உங்களுடைய துணை முத்தமிடுவது கட்டி அணைப்பது கண்களை கட்டிக்கொண்டு விளையாடுவது போன்றவை ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயம். இதை தவிர்க்கும் ஆண்கள் மீது அவர்களுடைய மனைவிக்கு ஈர்ப்பு வருவதில்லை. உங்களுடைய துணையின் விருப்பங்களையும், ஆசைகளையும் கேட்டு அறியாமல் பாலியல் உறவின் போது அவர்களை திருப்திபடுத்தாமல் செயல்படும்போது உங்களுடைய உறவில் இடைவெளி ஏற்படுகிறது. 

துர்நாற்றம் 

உடலுறவுக்கு முன்பு குளித்துவிட்டு சுத்தமாக வரும் ஆண்களை பெண்கள் விரும்புவார்கள். வியர்வை வழிய துர்நாற்றத்துடன் உடல் சுகாதாரத்தை பேணாமல் படுக்கையில் இணைந்திருக்க விரும்பும் ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வருவதில்லை. உங்களுடைய உடலில் சுகாதாரமும், ஆரோக்கியமும் இல்லாத நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால் தோல் அலர்ஜி பாலியல் ரீதியாக பரவும் நோய்களை தடுக்க முடியும். 

இதையும் படிங்க: வாய்வழி செக்ஸ் ரொம்ப ஆபத்தானதா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

சிலருக்கு தோன்றலாம் உழைத்துக் களைத்த வியர்வை வாசனையுள்ள ஆணை விரும்பாத பெண்களும் பெண்களா? என்று.. ஆனால் உங்களுடைய உடலை சுத்தமாக வைத்திருப்பது உங்களுக்கும் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். தினமும் குளித்துவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள். 

இதையும் படிங்க: செக்ஸ் வெச்சிக்கிறப்ப முனங்கினால்... இப்படியெல்லாம் காரணம் சொல்றாங்க! அடபாவிகளா..

Latest Videos

click me!