உடலுறவின் போது ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் கூறும் பொய்கள்..!!

First Published | Feb 4, 2023, 2:11 PM IST

சிலர் உடலுறவின் போது தங்கள் துணையை மகிழ்விப்பதற்காக அல்லது தமது சங்கடத்தை மறைக்க சில பொய்களை கூறுகின்றனர். திருமண உறவில் இருக்கும் அனைவருமே சொல்லக்கூடிய பொய்கள் என்றும் அவற்றை கூறலாம். உடலுறவின் போது ஆண்களும் பெண்களும் தங்கள் துணையிடம் கூறும் 5 பொய்களை மட்டுமே விரிவாக தெரிந்துகொள்வோம்.
 

ஆணுறை போடுவதில் சொல்லப்படும் பொய்

பாதுகாப்புடன் கூடிய உடலுறவின் போது, ஆண்கள் ஆணுறையை அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் ஆணுறை அணிந்தவர்களோ அல்லது ஆணுறை அணியாதவர்களோ கிட்டத்தட்ட எல்லா ஆண்களும் ஆணுறையுடன் உச்சத்தை அடைந்துவிட்டதாக கூறுவார்கள். பொதுவாக ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்கள் உச்சம் அடைவது குறைவு தான்.. எனினும், அதை மீறி ஆணுறை அணிந்த ஆண் தான் உச்சம்பெற்றதாக கூறுவது, உடலுறவு பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும் என்கிற காரணம் மட்டுமே. 
 

Having sex at this time is more beneficial

கடைசியாக உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படும் பொய்

காதலிக்கும் அல்லது டேட்டிங்கில் இருக்கும் ஆண்கள் பலர், தங்கள் காதலிக்கு கடைசியாக ஏற்பட்ட பாலுறவு குறித்து அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வங்காட்டுகின்றனர். இதுகுறித்து வெளிப்படையாக காதலியிடம் கேட்டாலும், அவர்கள் உண்மை சொல்வது கிடையாது. இதுகுறித்து உண்மையைச் சொல்லிவிட்டால், காதலனிடம் தங்களுக்கு இருக்கும் மதிப்பு மங்கிவிடுமோ என்கிற அச்சம் பல காதலிகளிடையே நிலவுகிறது. இதனால், காதலன் எப்போது பாலுறவு குறித்து கேட்டாலும், மழுப்பலாக பதில் கூறிவிடுவது அவர்களுடைய வழக்கமாக உள்ளது. 

Tap to resize

காதலனிடம் பெண்கள் கூறும் பொய்

பெண்களுக்கு காமல் களியாட்டம் திருப்திகரமாக இல்லை என்றபோதிலும், தங்களுக்கு திருப்தி அளித்ததாக பலரும் காதலனிடம் கூறிவிடுகின்றனர். ஆனால் பக்குவமாக ஒருநாளைப் பார்த்து, காதலனிடம் தங்களுடைய விருப்பதை பகிர்ந்துகொள்கின்றனர். எனினும், காதலி கூறும் தகவல்களை காதலன்கள் சற்று தர்சங்கடமாகவே உணர்கின்றனர். ஆரம்பத்தில் இதை சொல்ல முயற்சிக்கும் காதலிகள், பிறகு காதலின் நடவடிக்கையை பார்த்த பொய் கூற தொடங்கிவிடுகின்றனர். 

தவறாக பயன்படுத்தப்பட்ட பாலியல் சார்ந்த 5 சொற்கள்..!!

சிறுநீர்ப்பை பிரச்னை

சில பெண்களுக்கு உடலுறவின் போது சுரப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் போவதற்கும் கூட வாய்ப்புள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது உண்மையாக இருக்கலாம் ஆனால் அது பொய்யாகவும் இருக்கலாம். உடலுறவின் போது தற்செயலாக பெண்கள் சிறுநீரை வெளியேற்றிவிடுகின்றனர். இதனால் காதலன் தன்னை தவறாக எண்ணிவிடக் கூடாது என்று நினைக்கும் பெண்கள், தனக்கு சிறுநீர்ப்பையில் பிரச்னை இருப்பதாக பொய் கூறிவிடுகின்றனர். 

உயிருக்கு உயிரான காதல்

என்றென்றும் கணவனை நினைத்துக் கொண்டே இருப்பதாக பெண்கள் தங்களுடைய காதலனிடம் கூறுகின்றனர். அவர் தன்னுடன் இல்லாத நாட்களில், எப்போதும் அவரையே எண்ணி இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர். இதனால் அவ்வப்போது காதலன் அல்லது கணவனை சந்திக்கும் போது அல்லது பார்க்கும் போது ”உனை நான் காதலிக்கிறேன்”, ”மிகவும் விரும்புகிறேன்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது.

Latest Videos

click me!