செக்ஸ் பிரச்னைக்கு தன்னம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.!!

First Published | Mar 9, 2023, 2:26 AM IST

சில சமயங்களில் தன்னம்பிக்கையின்மை செக்ஸ் வாழ்க்கையில் கூட பிரச்னையை உருவாக்கி விடுகிறது. தனிப்பட்ட தருணங்களில் வாழ்க்கைத் துணைவர்களிடையே நீங்கள் சங்கடமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 

How to increase confidence in sex life

உடலுறவு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது, பாலியல் வாழ்க்கையும் மேம்படுகிறது. அதை குறைந்து போனால் பாலியல் வாழ்க்கை மட்டுமல்ல, உங்களுடைய சூழலும் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் உங்களுடைய பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு, உங்களுடைய தன்னம்பிக்கை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

நம்பிக்கை ஏன் முக்கியம்?

உடல் உறவுகள் மற்றும் நம்பிக்கை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. உடல் மகிழ்ச்சி வேண்டுமானால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பது தெரிந்ததே. அதனால் உறவை மேம்படுத்துவதற்கு நம்பிக்கை பெரிதும் உதவுகிறது.

Tap to resize

நம்பிக்கையை அதிகரிப்பது எப்படி?

கடந்த 2014-ம் ஆண்டு நம்பிக்கை குறித்து லோரி ப்ரோட்டோ ஆய்வை மேற்கொண்டார். அதில் மனநிறைவு திறன்கள் பெண்களின் லிபிடோவை அதிகரிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பெண்ணும் பாலினத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றும் அதற்கு ஒருபோதும் அச்சப்படக்கூடாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

பாலுறவு குறித்து பேசலாமா?

உங்கள் துணையுடன் செக்ஸ் பற்றி பேச வெட்கப்பட வேண்டாம், வெளிப்படையாக பேசுங்கள். நீங்கள் அதைப் பற்றி எவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறீர்களோ, அந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.

பாலுறவு விருப்பங்கள் முக்கியமா?

உங்கள் துணையுடன் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வெளிப்படையாக இருந்தால், எந்தவிதமான பிரச்னையும் வராது. ஒருவேளை அதில் மாற்றுக்கருத்து இருந்தாலும் கூட, உங்களுடைய துணையுடன் தான் நீங்கள் விவாதிக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்தால், எது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் எப்போது உங்களுக்கான நேரம் கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 
 

படுக்கையறை மாற்றங்கள் தேவையா?

பெரும்பாலான மக்கள் தங்கள் உடலைப் பற்றி ஏமாற்றமடைகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில், படுக்கையறையை மங்கலாக வைத்திருந்தால், உடல் பிரச்சனையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று எண்ணுகின்றனர். இதனால் தங்களது சொந்த மகிழ்ச்சியில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று நம்புகின்றனர். இது ஓரளவுக்கு உண்மையாகவும் உள்ளது.

தருணத்தை மறந்துவிட வேண்டாம்

பல சமயங்களில் உடல் உறவின் போது மகிழ்வதற்குப் பதிலாக நாம் சிந்திக்கிறோம், இது நம்பிக்கையை உலுக்குகிறது. இந்த தருணத்தை அனுபவிக்க முயற்சி செய்யுங்கள், மற்ற எல்லா எண்ணங்களையும் வலிகளையும் மறந்து விடுங்கள். இப்படி செய்தால் நிச்சயம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 

Latest Videos

click me!