Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?

First Published | Mar 2, 2023, 11:12 AM IST

காதல் முறிவு ஏற்பட்டவுடன் பல காதலர்கள் பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுகின்றனர். ஆனால் அது நல்ல செயல்பாடு கிடையாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
 

A breakup can also have a serious effect on the heart

கடந்த 2021-ம் ஆண்டு பல முன்னாள் காதலர்களை வைத்து பிரேக்-அப் செக்ஸ் குறித்த ஆய்வை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பொதுவாக சீனாவின் பண்பாட்டு முறைகள், இந்தியாவுடனும் குறிப்பாக தென்னிந்தியாவுடன் நிறைய பொருந்தக்கூடியதாக உள்ளது. அதனடிப்படையில் இதுதொடர்பான ஆய்வு தற்போதைய தலைமுறையினர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த ஆய்வு மொத்தம் 212 ஜோடி முன்னாள் காதலர்களிடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பிரேக் அப் செக்ஸுக்கு முந்தைய மன உணர்வு மற்றும் பிரேக் அப் செக்ஸுக்கு பிந்தைய மன உணர்வு உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்மூலம் பிரேக் அப் செக்ஸுக்கு பிந்தைய மனநிலை குறித்த ஆய்வுகள் கணக்கில்கொள்ளப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

மீண்டும் உணர்வு உண்டாகலாம்

முன்னாள் காதலருடன் பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம், மீண்டும் அவர் மீது காதல் உணர்வு ஏற்படலாம். இதனால் குழப்பம் ஏற்பட்டு, உங்களுடைய மனம் புண்படும். ஒருவேளை உங்களுக்கு ஆர்வமிருந்து, முன்னாள் காதலருக்கு ஆர்வமில்லாமல் போனால், மேலும் தர்மசங்கடமாகும். அதை உங்களால் ஏற்க முடியாமல், உணர்வுகள் மேலும் ஆழமாக சென்று, அவரை தொந்தரவு செய்யும் நிலைக்கு நீங்கள் ஆளாகலாம். 

Tap to resize

தவறான நம்பிக்கை உருவாகலாம்

பிரேக் அப் செக்ஸ் என்பது பெரும்பாலும், காதலர்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான தவறான நம்பிக்கை உருவாக்கிவிடும். ஒருவேளை உங்களுடைய முன்னாள் காதலருக்கு ஆர்வமில்லாமல் போனால், உறவில் தீங்கு ஏற்படும். இதனால் மனச்சோர்வு உருவாகி, உங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக பெரிதும் வாய்ப்புள்ளது.

பாலியல் நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு

இன்றைய காலத்தில் பல காதலர்கள் பிரேக்-அப் செய்த அடுத்த நொடி, புதிய காதலை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களுடன் உடலுறவு சார்ந்த நடவடிக்கையில் முன்னாள் காதலர்கள் ஈடுபடலாம் அல்லது உடலுறவு தேவையை பூர்த்தி செய்ய வேறொரு துணையைக் கூட நாடலாம். இந்த தருணத்தில் பிரிந்த காதலர்கள் பிரேக்-அப் செக்ஸுக்கு வேண்டி சந்திப்பது பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பிரேக்-அப் செக்ஸுகள் பாதுகாப்பற்ற சூழலில் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முறையான பிரேக்-அப் நடக்காமல் போகலாம்

பிரேக்அப் செக்ஸ் வாயிலாக ஒருவருக்கு வேண்டிய பிரிதல் முறையாக கிடைக்காமல் போகலாம். இதனால் உங்களுடைய மனதில் சஞ்சல் ஏற்படும். இது பிரேக்-அப் தானா? அல்லது மீண்டும் காதல் தோன்றுகிறதா? என்கிற உணர்வு ஏற்படும். இதனால் பிரேக்-அப்புக்கு வேண்டிய ஆதரவு கிடைக்காமல், உறவின் முடிவை ஏற்றுக்கொள்வதை தாமதப்படுத்தலாம்.

Stomach bloating: வயிறு உப்பசத்திற்கு உடனடி பலன் கிடைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

நடத்தை மாற்றங்கள் 

பிரேக்அப் செக்ஸில் ஈடுபடுவது, உணர்வு ரீதியான வலியைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக உடலுறவைப் பயன்படுத்துவதாகும். அதுமட்டுமின்றி, உடலுறவு என்கிற பெயரால் முன்னாள் துணையைக் அடக்கி ஆள பயன்படுத்துவது உட்பட ஆரோக்கியமற்ற நடத்தை முறைகளை உங்களுக்குள் உருவாக்கக்கூடும். இது உங்களை தவறான சிந்தனைக்கும் செயலுக்கும் வழிவகுக்கும். 
 

Latest Videos

click me!