காம சூத்ரா என்றால் வெறும் காமப் புத்தகம் இல்ல.. அதுல 'யோனி பொருத்தம்'னு முக்கியமான வேறொன்னு இருக்கு தெரியுமா?

First Published | Jun 2, 2023, 4:57 PM IST

காமசூத்ரா சொல்லித்தரும் வாழ்க்கை பாடங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். அதிலும் யோனி பொருத்தம் சுவாரசியமானது. வாங்க தெரிந்து கொள்ளலாம். 

காமத்தின் ஆழமாக தெரிந்து கொள்ள காமசூத்திரத்தை படிக்க வேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள் ஆனால் இதில் காமத்தை தவிர்க்கவும் வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பழங்கால இந்தியாவில் வாழ்ந்த முனிவரான வத்சயனா காமசூத்திரத்தை தொகுத்து நமக்கு வழங்கினார். இதில் பல எழுத்தாளர்களின் பங்களிப்பு இருக்கிறது. 

காமசூத்ரா என்ற பெயரை வைத்து இது காமத்தை குறித்து புத்தகம் என ஒதுக்கி தள்ளக் கூடாது. இதில் வாழ்வுக்கு தேவையான பல விஷயங்கள் உள்ளன. அப்படி காம சூத்ராவில் என்ன தான் சொல்லியிருக்கு என்பதை இங்கு காணலாம். 

Tap to resize

காமசூத்திரா வாழ்க்கை கலையை எடுத்து சொல்கிறது. நீதி, செல்வம், காமம் ஆகியவற்றை எப்படி அடைய வேண்டும் என்பதை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை பற்றி அறிந்து கொள்ள ஒரு திறப்பாக இருக்கும் என்ற பிம்பம் கூட உள்ளது. அதாவது உடலுறவுக்கு ஏற்ற பெண்கள், பொருத்தமற்ற பெண்கள் யார் என காமசூத்திரா படித்தால் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது ஆண் மைய சிந்தனையில் எழுதப்பட்ட புத்தகம் என்பதையும் மறுக்க முடியாது. 

யோனி பொருத்தம்: 

காமசூத்ராவில் யோனி பொருத்தம் என்ற விஷயம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது திருமணம் புரிந்து கொள்ளும் தம்பதிகளுக்குள் பாலுறுப்புகள் சமரதமாக இருப்பது அவசியம். ஆணும் பெண்ணும் புணரும் போது அவர்களுடைய புணர்ச்சி உறுப்புகள் இறுக்கமாக இருக்க வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் திருப்தி இருக்காதாம். 

காமசூத்ரா பாலியல் விஷயங்களில் நமக்கு அறிவை வழங்குகிறது ஒருவருடைய மனதில் இருக்கும் பாலியல் ஆசைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விளக்குகிறது. பல்வேறு உடலுறவு நிலைகளை நமக்கு காட்டுகிறது. உடலுறவின் போது எப்போது அணைக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு எடுத்துச் சொல்கிறது. பெண்ணின் மனதை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை ஆண்களுக்கு தெள்ளத் தெளிவாக காமசூத்ரா விளக்குகிறது.  

இதையும் படிங்க: உடலுறவில் கிரங்கடிக்கும் உச்சக்கட்டம்! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனைவியை எப்படி நடத்த வேண்டும்? என்பது குறித்தும் காமசூத்ரா நமக்கு சொல்கிறது. வயதில் மூத்த மற்றும் இளைய மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும், மறுமணம் செய்த கன்னி விதவைகளை நடத்துதல், கணவனின் அன்பு கிடைக்காத மனைவி குறித்து பேசுகிறது. விலைமாதர்களால் விரும்பப்படும் ஆண்கள், ஆண்களை விரும்பும் விலைமாதர்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: பெண்கள் வயதான ஆண்களுடன் உறவு வச்சிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்..!! அட!! இப்படியுமா இருக்கும்!!

Latest Videos

click me!