செக்ஸில் திருப்தி இல்லாதது மட்டும் தான் கள்ள உறவுக்கு காரணமா? இன்னும் பல விஷயங்கள் இருக்கு..

First Published | Sep 8, 2023, 3:13 PM IST

Gleeden என்ற ஆன்லைன் டேட்டிங் செயலி நடத்திய ஆய்வில் கள்ள உறவுக்கான முக்கிய காரணங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது. 

marriage

இந்தியா ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் திருமணம் என்பது புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் சமீப காலமாக நாட்டில் திருமணத்தை மீறிய கள்ள உறவுகள் அதிகரித்து வருகின்றன. பலர் தங்கள் துணைக்கு துரோகம் செய்துவிட்டு தகாத உறவில் ஈடுபடுகின்றனர். Gleeden என்ற ஆன்லைன் டேட்டிங் செயலி நடத்திய ஆய்வில் கள்ள உறவுக்கான முக்கிய காரணங்கள் தெரியவந்துள்ளது. 

துணையை தாண்டி வேறொரு மீதான உடல் ரீதியான ஈர்ப்பு துரோகத்திற்கு மிகவும் பொதுவான காரணம். இதனால் பலர் தங்களின் துணையை ஏமாற்றி கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். Gleeden இன் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் துணையை ஏமாற்றுவதாக  26 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். கள்ள உறவில் ஈடுபட சமூக ஊடகங்கள் காரணம் என்று 25 சதவிகிதம் பேரும், டேட்டிங் பயன்பாடுகள் காரணம் என 19 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

உறவில் ஒரு துணை புறக்கணிக்கப்பட்டதாகவோ, பாராட்டப்படாதவர்களாகவோ அல்லது அன்பற்றவர்களாகவோ உணரும்போது, அவர்கள் கவனத்தையும் பாசத்தையும் வேறொரு இடத்தில் தேடலாம். எனவே அவர்கள் தங்கள் துணைக்கு துரோகம் செய்து கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். உறவில் உணர்வுப்பூர்வ ஆதரவின் பற்றாக்குறை துரோகத்திற்கு பொதுவான காரணம் என்று Gleeden நடத்திய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 57 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்கள் துணைக்கு துரோகம் செய்ததாக உறுதிசெய்துள்ளனர்.

வேறொருவருடன் வலுவான உணர்ச்சித் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதால் சிலர் தங்கள் துணையை ஏமாற்றுகின்றனர். . மக்கள் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது ஒருவருடன் ஆழமாகத் தொடர்புகொள்ளும்போது இது நிகழலாம். இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 44 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிப்பது சாத்தியம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். 

Image: FreePik

சிலர் ஒரு புதிய காதலின் உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். Gleeden கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 37 சதவீதம் பேர் புதிய உறவின் உற்சாகத்திற்காக ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் உறவில் திருப்தி இல்லாதது, துரோகத்தின் குறிப்பிடத்தக்க காரணம இருக்கலாம். 41 சதவீதம் பேர் வழக்கமான உடலுறவுக்குப் பிறகும், தாங்கள் முழுமையாக திருப்தியடைய மாட்டார்கள் என்றும், 55 சதவீதம் பேர் தங்கள் துணையதவிர வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். தங்கள் உறவில் பாலியல் ரீதியாக திருப்தி அடையவில்லை என்று உணரும்போது, ​​வேறு இடங்களில் உடல் ரீதியான நெருக்கத்தை தேடுவதால் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.

Latest Videos

click me!