செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமையணுமா? அப்ப இதை கண்டிப்பாக பண்ண வேண்டும்..!

First Published | May 8, 2023, 3:53 PM IST

சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தலாம். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தாம்பத்தியம் நன்றாக இருந்தால் தான் இல்லறம் இனிக்கும். 

மன அழுத்தம், சோர்வு, முதுமை ஆகிய காரணங்களால் பெரும்பாலானோருக்கு பாலுணர்வு குறைகிறது. ஆனாலும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பாலியல் செயல்திறனை மேம்படுத்த உதவும். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தும்.  

நல்ல தூக்கம் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாகவும், பாலுறவு சுறுசுறுப்பாகவும் இருக்கும். குறைந்த தூக்கம், தூக்க கோளாறு இருந்தால், பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடலுறவுக்கான ஈடுபாடும் குறையும். இது குறைந்த பாலுணர்வுக்கும் வழிவகுக்கிறது. எனவே ஆழ்ந்த தூக்கம் அவசியம். 

Tap to resize

ஒரு நல்ல உறவைப் பெற, நாம் ஒருவருக்கொருவர் முதலில் இதயத்தைத் திறக்க வேண்டும். எல்லா பிரச்சனைகளையும் துணையுடன் பேசி தீர்க்க முயலுங்கள். துணைக்கும் உங்களுக்கும் இடையே தாம்பத்தியம் நன்றாக இல்லாவிட்டால் அதை துணையிடம் சொல்லுங்கள். அவசியம் என்றால் முறையான சிகிச்சை பெறவும்.  

உடல் பருமன் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுப்பதோடு, பாலியல் செயலிழப்பு போன்ற பாலியல் பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. சில வகையான உடற்பயிற்சிகள் இனப்பெருக்க திறனை அதிகரிக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: 'நான் எதுக்கு இத்தனை பேரை காதலிச்சேன்'..ஒரு பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம்..

சிப்பி கறி (oysters ), சிக்கன், பைன் கொட்டைகள் ஆகியவை துத்தநாகம் நிறைந்தது. இந்த உணவுகளை சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை நீங்கும். இது உங்களது சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.  

அதிகாலையில் எழும் பழக்கம் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிகாலையில் எழுவதால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். இந்த செயல்பாடு உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். எளிதில் சோர்வடையமாட்டீர்கள். பாலியல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக மாறுவீர்கள். 

இதையும் படிங்க: புதிய உறவை தொடங்குபவர்கள் எப்போது செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும்?

Latest Videos

click me!