உங்க செக்ஸ் வாழ்க்கை சலிப்பா இருக்கா? அப்போ இந்த விஷயங்களை ட்ரை பண்ணுங்க...இனி போரடிக்காது..!!

First Published | Aug 19, 2023, 9:00 PM IST

உங்கள் செக்ஸ் வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க இந்த விஷயங்களை கொஞ்சம் ட்ரை பண்ணுங்கள்.

இன்று பெரும்பலான தம்பதிகள் தங்களது பாலியல் வாழ்கை திருப்தியற்றதாக உணர்கின்றனர். இது அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். மேலும் சில தம்பதிகள் தங்களது பாலியல் வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமானதாக இருக்க சில விஷயங்களை முயற்சி செய்வது உண்டு. 
பொதுவாக தம்பதிகள் இருவரும் இணைந்து சில விஷயங்களை முயற்சித்தால் மட்டுமே அந்த உறவு மகிழ்ச்சியாக இருக்கும். அந்தவகையில் உங்களது பாலியல் வாழ்க்கையும் சுவாரஸ்யமானதாக இருக்க சில வழிகள் இங்கே உள்ளன.

விருப்பங்களை அறிந்துகொள்ளுங்கள்: 
உடலுறவு கொள்ளும் முன் உங்கள் துணையின் விருப்பு மற்றும் வெறுப்புகளை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். எனவே, தம்பதிகள் இருவரும் பேசி தங்களது விருப்பு, வெறுப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமையணுமா? அப்ப இதை கண்டிப்பாக பண்ண வேண்டும்..!

Tap to resize

தேவையை பூர்த்தி செய்யுங்கள்:
படுக்கையில் போகும் முன் உங்கள் துணையின் தேவையை கேட்டறிந்து அவர்களை திருப்திபடுத்துங்கள். ஏனெனில், ஒருவரின் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்யும்போது, அது உடலுறவை சுவாரஸ்யமாக மாற்றும்.
 

முன்விளையாட்டு:
இது தம்பதிகள் இருவரும் உச்சக்கட்டம் அடைய உதவும் சிறந்த வழிகளில் ஒன்று ஆகும். இது உங்கள் பாலியல் வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றும். எனவே, உடலுறவில் தம்பதிகள் முன்விளையாட்டை முயற்சி செய்து பாருங்கள்.
 

புதிதாக முயற்சியுங்கள்:
தம்பதிகள் இருவரும் எப்போதும் படுக்கையறையில் செயல்படாதீர்கள். அதற்கு பதிலாக வீட்டில் சில சுவாரஸ்யமான இடங்களையும் தேர்வு செய்யுங்கள். உதாரணமாக டேபிள், சமையலறை, மாடிபடிகட்டு போன்ற பல புதுமையான இடங்களில் முன்விளையாட்டு விளையாடுங்கள். இந்த முயற்சி உங்கள் துணையை இன்னும் தூண்டும் மற்றும் அவர்களை திருப்திபடுத்தும்.

இதையும் படிங்க:  வாழ்க்கையில் ஒரு தடவையாச்சும் இப்படி முத்தம் கொடுங்க!! உங்க துணை சொக்கிடுவாங்க.. 23 வகை ரொமாண்டிக் முத்தங்கள்!
 

பாலியல் நிலைகள் 
தம்பதிகள் உடலுறவு கொள்ளும் போது புதிய பாலியல் நிலைகளை முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு  இன்பத்தை முற்றிலுமாக கொடுக்கும். இதற்கு நீங்கள் முன்கூட்டியே பேசி கொள்ள வேண்டும். மேலும் உடலுறவு போது உச்சகட்டம் அடைவதற்கு விதவிதமான பாலியல் நிலைகளை முயற்சி செய்து பாருங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்கள் பாலியல் வாழ்க்கை மென்மேலும் சுவாரஸ்யமானதாக மாறும். குறிப்பாக இது உங்கள் உறவை வலுவாக மாற்றும்.

Latest Videos

click me!