உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் தீப்பொறியை மீண்டும் தூண்ட உதவும் டிப்ஸ் இதோ..

First Published | Sep 11, 2023, 4:27 PM IST

உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் தீப்பொறியை மீண்டும் தூண்டுவதற்கான 5 வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

உடலுறவு என்பது ஆரோக்கியமான மற்றும் நிறைவான திருமண உறவின் இன்றியமையாத பகுதியாகும். இது ஒரு ஆழமான தொடர்பை உருவாக்க உதவுகிறது. தம்பதிகளிடையே உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான பிணைப்பை மேம்படுத்துகிறது. இருப்பினும், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல காலப்போக்கில், உடலுறவின் உற்சாகமும் புதுமையும் மறைந்துவிடும், இதனால் தம்பதிகள் சலிப்புணர்வுடன் திருப்தியற்றவர்களாக உணர்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக, உங்கள் துணையுடன் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் மீண்டும் ஆர்வத்தை தூண்ட பல வழிகள் உள்ளன. புதிய செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை ஆராய்வதன் மூலம், ஒருவருக்கொருவர் உங்கள் உடல் மற்றும் உணர்ச்சித் தொடர்பை மேம்படுத்தலாம். நீங்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய விரும்பினாலும், இந்த குறிப்புகள் உங்கள் பாலியல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் தீப்பொறியை மீண்டும் தூண்டுவதற்கான 5 வழிகள் இதோ:

Tap to resize

வெளிப்படையாகப் பேசுங்கள்: தொடர்பு என்பது ஆரோக்கியமான உறவின் அடிப்படையான விஷயம். உடலுறவிலும் அது மிக அவசியம். உங்கள் ஆசைகள், கற்பனைகள் மற்றும் எல்லைகள் பற்றிய வெளிப்படையான மற்றும் நேர்மையான தகவல்தொடர்பு உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு அவசியம். உங்கள் துணையுடன் உங்கள் விருப்பங்களைப் பற்றி விவாதிப்பது, உங்கள் படுக்கையறை செயல்பாடுகளுக்கு புதிய அளவிலான உற்சாகத்தைக் கொண்டுவரவும் உதவும்.
 

புதிய விஷயங்களை முயற்சிக்கவும்: படுக்கையறையில் புதிய விஷயங்களை முயற்சிப்பது செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும். வெவ்வேறு கோணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்து  உங்கள் இருவருக்கும் எது நல்லது என்பதை கண்டறியவும். இதன் மூலம் உடலுறவில் ஆர்வம் அதிகரிக்கும், இதனால் உறவை வலுப்படுத்த உதவும்.
 

சரியான சூழலை உருவாக்குங்கள்: சரியான சூழல் என்பது பாலியல் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மெழுகுவர்த்திகள், இசை அல்லது மென்மையான விளக்குகள் மூலம் மனநிலையை அமைப்பது நிதானமான மற்றும் சிற்றின்ப சூழ்நிலையை உருவாக்க உதவும். சரியான சூழலை உருவாக்குவதற்கான பிற ஆக்கப்பூர்வமான வழிகளையும் நீங்கள் ஆராயலாம், உங்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உங்கள் படுக்கையறையை அலங்கரித்தல் போன்ற செயல்களையும் செய்யலாம்.
 

நெருக்கத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்: நமது வேகமான உலகில், நெருக்கத்தை விட வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது எளிது. இருப்பினும், உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த, நெருக்கத்திற்கு நேரம் ஒதுக்குவது முக்கியம். பாலியல் செயல்பாடுகளுக்கு நேரத்தை ஒதுக்கி, அதற்கு முன்னுரிமை கொடுங்கள். இது உங்கள் உறவில் உள்ள நெருக்கத்தை ஆழப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் கவனம் செலுத்தவும், உங்கள் இருவருக்குமான உலகத்தில் நீங்கள் இருக்கவும் உதவும்.
 

அவசரம் வேண்டாம் : இறுதியாக, பாலியல் செயல்பாடுகளை அவசரப்படுத்த வேண்டாம். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியில் கவனம் செலுத்துவது அனுபவத்தை மேம்படுத்தும். ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ள அதிக நேரத்தை அனுமதிப்பதன் மூலம் அதை மிகவும் சுவாரஸ்யமாக்கலாம். ஒருவருக்கொருவர் உடல்களை ஆராய்ந்து, உணர்ச்சிமிக்க நெருக்கத்தை உருவாக்க உங்கள் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

Latest Videos

click me!