செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்.. தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..

First Published | Oct 7, 2023, 10:02 PM IST

உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

Benefits of sex for men

இன்றைய காலகட்டத்தில், மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் கவலை மற்றும் மன அழுத்தம். மின்னஞ்சல்கள், முடிவில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் அதிக ஈடுபாடு ஆகியவை,, நமது மன அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது வாழ்க்கை முறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில் சார்ந்த பிரச்சனைகள் முதல் தனிப்பட்ட வேலைகள் வரை இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிப்பது மட்டுமின்றி உங்கள் பாலியல் வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது.

Sex Positions

நீங்கள் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால், அது கார்டிசோல் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். எனவே உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், சிறந்த பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்களைக் கொடுப்பது உங்கள் மன அழுத்தத்தை பராமரிக்கவும், உங்கள் ஆற்றலையும் மனநிலையையும் அதிகரிக்க உதவும். வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள்,  மற்றும் சோடியம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.

தினமும் யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்ட நிலைகளை குறைக்க யோகா உதவுகிறது, இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துஅதிகரிக்கிறது. உடல் மற்றும் சுவாச விழிப்புணர்வை அதிகரிப்பதில் இருந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைப்பது வரை, உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு யோகா சிறந்த சாத்தியமான விருப்பமாக கருதப்படுகிறது. 

Sleep after sex

மோசமான தூக்க சுழற்சி மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். உங்கள் தூக்க வழக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது உங்கள் மன அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. மேலு நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக, நீங்கள் சரியான தூக்கத்தை எடுக்காமல் ஓய்வெடுக்காமல் இருந்தால், இது உங்கள் ஆரோக்கியத்தையும் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும்.

ஆண்களே.. பெண்களே.. உடலுறவின்போது இதையெல்லாம் நிச்சயம் தவிர்க்கணும் - நிபுணர்கள் தரும் அட்வைஸ்!
 

Monsoon Sex Problems

உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு சமூக ஆதரவு அமைப்பு இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் தனிமையாக உணர்ந்தால், உடனடியாக உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களைச் சார்ந்து இருப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் பாலியல் தேவைகளை உங்கள் துணையுடன் தெரிவிக்கும் தைரியத்தையும் தரும்.

Couples after sex

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பாலியல் வாழ்க்கைக்கு ஆழ்ந்த சுவாசம் அதிக நன்மைகளை வழங்குகிறது. ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும், இது உங்கள் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது தவிர, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளும் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியான வாழ்க்கையை நடத்த உதவுகின்றன.

Latest Videos

click me!