உங்க துணைகிட்ட இந்த மோசமான பழக்கம் இருக்கா? அப்ப அந்த உறவே விஷமா மாறிப்போகும்!! யாரும் காப்பாத்தவே முடியாது!!

First Published | Jun 11, 2023, 6:18 PM IST

கணவன் மனைவி உறவுக்குள் இந்த மோசமான பழக்கம் இருந்தால் அந்த உறவு நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடும். 

பெரும்பாலும் உறவுகளில் நம் மனதில் நாம் உருவாக்கிய பிம்பம், எதிர்கால திட்டத்திற்கு ஏற்றவாறு ஒரு நபரை கட்டுப்படுத்த அல்லது மாற்ற முயற்சிக்கிறோம். இது தனிநபருக்கும், அந்த உறவுக்கும் கூட நச்சுத்தன்மையுள்ளதாக மாறும். எப்போதும் நம்மை கட்டுப்படுத்தும் இயல்புடைய ஒருவர் நம் துணையாக இருந்தால் அவருடைய விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய நம்மை பயன்படுத்தி கொள்வார். உறவில் பாதுகாப்பின்மை உணர்வு இல்லாமல் இருப்பவர்கள் இதை செய்வார்கள். ஆனால் உறவில் துணையை கட்டுப்படுத்தி வைப்பது அந்த உறவுக்கு நல்லதல்ல. உங்கள் துணை உங்களுக்கு நச்சுத்தன்மையான நபர் என்பதை எப்படி கண்டறிவது என்பதை இங்கு காணுங்கள்.

மோசமான உறவின் அறிகுறிகள்!! 

உங்களுடைய துணை ஒவ்வொரு முறையும் எதை செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று உங்களுக்கு எப்போதும் அறிவுறுத்த முயற்சித்தால், அது நடத்தையை கட்டுப்படுத்துவதாகும். ஒருவருக்கு நல்ல முறையில் அறிவுரை சொல்வது வேறு விஷயம், ஆனால் ஒருவரை எப்போதுமே கட்டாயப்படுத்துவது ஒரு நச்சு மனப்பான்மையாகும். 

Tap to resize

உங்கள் துணை அவருடன் தொடர்பில்லாத விஷயங்களில், உங்களுடைய தனிப்பட்ட முடிவுகளில் குறுக்கிடும்போது, ​​அவர் உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று அர்த்தம். அதேசமயம், ஒரு நச்சு உறவில், துணை உங்களை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறார். இது சரியில்லை. 

எதார்த்தத்தைப் பற்றிய நமது தவறான கருத்துகளுக்கு பொருத்தமாக நம்முடைய துணையை மாற்ற முயற்சிக்கக் கூடாது. நம்மைப் போல் சிந்திக்கவும், நம்மை போலவே நடந்து கொள்ளவும் பிறரை கட்டாயப்படுத்துவது அவர்களின் தனித்தன்மையைக் கொன்றுவிடுகிறது. உங்கள் துணையின் தனித்துவத்தை கொன்றுவிட்டு அவர்களை உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்து கொள்ளலாம். ஆனால் அது ஒரு விளையாட்டு பொருளை போல தான். நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் ஒருநாள் அது உடைந்து போகும். இது உறவுக்கு நல்லதல்ல. 

Latest Videos

click me!