செக்ஸ் வாழ்க்கை உற்சாகமாக இருந்தால் திருமண வாழ்க்கையையும் நன்றாக மாறும். முதல் முறை உடலுறவு கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்கென சில முன்தயாரிப்பு செய்யலாம். ஆனால் பயம் இருக்கக் கூடாது. ஏனென்றால் சில கட்டுக்கதைகள் முதல் முறை உடலுறவு வைப்பது குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தி வருகிறது. முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
பாலியல் அனுபவம் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. முதல் முறையாக உறவு கொள்ளும் போது அது சங்கடமாகவோ அல்லது சரியாக செய்து முடிக்கப்படாமலோ கூட இருக்கலாம். இது இயல்பானது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அனுபவம் வெவ்வேறாது; தனித்துவமானது உங்களுடைய சொந்த உடல் உங்களுடைய பாலியல் துணையுடன் வசதியாக உணர நேரமும், பயிற்சியும் அவசியமாக இருக்கிறது. உங்களுக்கு இடையே பரஸ்பரம் புரிதலும் மரியாதையும் இருப்பது பாலியல் வாழ்க்கையில் நல்ல அனுபவத்தை தரும். ஆனால் அது அடுத்தடுத்த உறவுகளில் கைவசப்படும். முதல் முறை உறவு கொள்ளும்போது இருக்கும் தயக்கம் இயல்பானது. பயப்பட வேண்டாம்.
ரத்தம் வருதல்!!
முதல்முறையாக உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு யோனியில் ரத்தப்போக்கு ஏற்படும் என்பது பரவலான நம்பிக்கையாக இருக்கிறது. சில பெண்களுடைய பெண்ணுறுப்பு அளவில் சிறியதாக இருக்கும். இதனால் முதல்முறையாக உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு ரத்தக் கசிவு இருக்கலாம். ஆனால் விளையாட்டு துறையில் உள்ள பெண்களுக்கும், அதிக உடல் உழைப்பை செலுத்தும் பெண்களுக்கும் இந்த பிரச்சனை வர வாய்ப்பில்லை. அதற்காக இரத்தப்போக்கு இல்லாத பெண்கள் தவறானவர்கள் கிடையாது. ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரியானது.
வலி தவிர்க்க முடியாதது
முதல் முறை உடலுறவின் போது வலி தவிர்க்க முடியாதது. இருவருடைய உறுப்பிலும் வலி நிறைந்த உராய்வை தடுக்க லூப்ரிகேஷனைப் பயன்படுத்தலாம். பாலியல் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் துணை இதமாக உணருவார். வலி பெரிதாக தெரியாது. தொடர்ந்து வலி ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம்.