என் மனைவி லெஸ்பியனா இருப்பாரா? அந்த நேரத்தில் மட்டும்.. குழம்பும் வாசகருக்கு நிபுணரின் தெளிவான பதில்..!

First Published | May 18, 2023, 8:29 PM IST

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள உறவில் சந்தேகம் மட்டும் வரவே கூடாது. 

வாசகர் கேள்வி;" எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்குள் பெரிதாக கருத்து வேறுபாடுகள், சண்டைகள் எதுவும் வருவதில்லை. என் மனைவியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வாள். எல்லா விஷயங்களிலும் எங்களுக்குள் ஒத்து போகும். ஆனால் உடலுறவில் மட்டும் திருப்தி இல்லை. அந்த நேரம் வரும்போது என் மனைவி தனித்து சென்று விடுகிறார். ஒவ்வொரு முறை உடலுறவு வைத்துக் கொள்ள நான் முயலும் போதும், அவர் அதை தவிர்க்க காரணங்களை அடுக்குகிறார். சில நேரம் கட்டியணைப்பார். சில முத்தங்களும் கொடுத்து என்னை மெய்மறக்க செய்வார். ஆனால் உடலுறவுக்கு மட்டும் 'நோ' தான். ஒருவேளை அவர் லெஸ்பியனாக இருப்பாரோ? என்று கூட எனக்கு தோன்றுகிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்"எனக் கேட்டுள்ளார். 

நிபுணர் பதில்:"அன்பான வாசகரே, நீங்கள் இப்போது குழப்பமான மனநிலையில் இருப்பது புரிகிறது. உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. நீங்கள் உங்களுடைய மனைவியை நேசிப்பது போல அவரும் உங்களை நேசிக்கிறார் என்றும் சொல்கிறீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல உரையாடலும், அன்பும் புரிதலும் அவசியம் இருக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் ஆசிர்வதிக்கப்படிருக்கிறீர்கள். 


கணவன் மனைவி வெறும் அன்பினால் மட்டுமல்ல.. காதலும் காமமும் கலந்து தான் இணைக்கப்பட வேண்டும். உடலும் உள்ளமும் இணையும்போது தான் அங்கு நெருக்கம் இன்னும் அதிகரிக்கும். ஆனால் உங்களுடன் உடல்ரீதியாக நெருங்க உங்களுடைய மனைவிக்கு ஏதோ தடை இருப்பதாக தெரிகிறது. அவர் லெஸ்பியனாக இருப்பதால் மட்டும் தான் அப்படி நடந்து கொள்வார் என்பது தவறான புரிதல். 

ஒருவருடைய பால் ஈர்ப்பை மேலோட்டமாக நாம் கணித்துவிட முடியாது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என உங்கள் மனைவியிடம் எதையும் கேட்க வேண்டாம். அவர் உடலுறவில் நாட்டம் இல்லாமல் விலகி செல்ல என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவருடன் அதை குறித்து மென்மையான உரையாடலை தொடங்குங்கள். 

இதையும் படிங்க: போர்ன் ஸ்டார்ஸ் சொல்லும் செக்ஸ் சீக்ரெட்ஸ்!!

தாம்பத்தியத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். அவர் லெஸ்பியனாக இருக்கும்பட்சத்தில் உங்களுடன் நெருங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் உங்கள் மனைவி உங்களை முத்தமிடுவதாக சொல்கிறீர்கள். அவருக்கு உடலுறவு குறித்து அச்சம் இருக்கலாம். இது குறித்து வெளிப்படையாக பேசி பாருங்கள் அல்லது நல்ல ஆலோசகரிடம் சென்று வாருங்கள். அவர் மனதில் இருக்கும் குழப்பம், அச்சம் நீங்கினால் உங்கள் தாம்பத்தியம் சிறக்கும் வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: அக்கா, தங்கை இருவருக்கும் தாலி கட்டிய இளைஞர்! அதுக்கும் இப்படி ஒரு காரணமா? அடப்பாவி!!

Latest Videos

click me!