செக்ஸிற்கு பின் இவைகளை செய்வதால் பல்வேறு பிரச்சனைகள் வராமல் தடுத்திடலாம்!

First Published | Mar 31, 2023, 1:02 PM IST

உடலுறவுக்கு பிறகு , பின்பற்ற வேண்டிய சுகாதார விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
 

தாம்பத்தியத்திற்கு பின் பேணிக்காக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் பெண்கள் சுகாதார நடவடிக்கைகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.தாம்பத்தியத்திற்கு பிறகு மீண்டும் அணிந்திருந்த அதே உள்ளாடைகள் அணியலாமா என்ற குழப்பம் அதிகமானருக்கு இருக்கும். அணிந்த அதே உள்ளாடைகள் அணிவதால் பல நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆக உடலுறவுக்கு பிறகு,பின்பற்ற வேண்டிய சுகாதார விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தாம்பத்தியத்திற்கு பின்:

உடலுறவு செய்த பிறகு பெண்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் சிறுநீர் பாதை தொற்றுலிருந்து அது பாதுகாக்கும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே நேரத்தில் பிறப்புறுப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதும் மிக முக்கியான ஒன்றாகும். தாம்பத்தியத்திற்கு பிறகு முதலில் அணிந்திருந்த உள்ளாடைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

​நோய்த்தொற்றுகள் :

தாம்பத்தியத்திற்கு பிறகு உள்ளாடைகளை உடுத்துவத்தை கூடுமானவரை தவிர்க்கலாம் அல்லது உங்களுக்கு வசதியாக இருக்கும் காற்றோட்டமான உள்ளாடைகளை அணிவது சிறப்பாகும். அப்படியெனில் யோனி பகுதிக்கு காற்று புகுமாறு உள்ள ஆடைகளை அணிவது மிகச் சிறந்தது.

இவ்வாறு செய்வதால் நமைச்சல் போன்ற நோய் தொற்ற்றிலிருந்து பாத்துக்கலாம். இப்படி முன்பு அணிந்திருந்த உள்ளாடைகள் அணியும் பட்சத்தில் அந்த உள்ளாடைகளில் உள்ள ஈரப்பதம் மோசமான பாக்டீரியாவை உற்பத்தி செய்ய ஏதுவாக அமையும். தவிர ஈஸ்ட் போன்ற நோய்த் தொற்றுகள் உருவாகாமல் தடுக்க உள்ளாடைள் அணிவதை தவிர்த்து விட்டு காற்றோட்டமுள்ள (லூசாக இருக்கும் உடைகளை) ஆடைகளை அணியலாம்.

Tap to resize

தாம்பத்தியத்திற்கு பிறகு சிறுநீர் கழித்தல்:

தாம்பத்தியத்திற்கு பிறகு சிறுநீர் கழிப்பது மிக சிறந்த மற்றும் செய்ய வேண்டிய ஒரு செயலாகும் என்று மருத்துவர்கள். இப்படி சிறுநீர் கழிப்பதால் சிறுநீரக தொற்றுக்களை தடுக்க முடியும். இப்படி செய்யும் போது யோனியில் இருக்கின்ற பாக்டீரியாக்கள் உறவுக்கு பின் சிறுநீர் குழாயில் சேரும் .இதனை தடுக்கவே உறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

​ஈரப்பதம்:

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கொஞ்சம் ஈரப்பதம் ஏற்படும். விந்தின் வியர்வை, யோனி திரவம், விந்தின் வெளிப்பாடு போன்றவை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது உண்டாகிறது.

உடலுறவு முடிந்த பிறகு யோனி பகுதியையம், விந்து பகுதியையும் ஈரமில்லாமல் வைப்பது முக்கியமாகும். உடலுறவு செய்த பிறகு , சிறுநீர் கழித்த பின் தண்ணீர் விட்டு அலசிய பின் சுத்தமான துணி வைத்து பிறப்புறுப்பை நன்றாக ஒத்தி விட வேண்டும். இப்படி செய்யாவிடில் ஈரப்பதம் மூலமாக பாக்டீரியா தங்கி பெருக்கி விடுமமென்பதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தவிர பிறப்புறுப்பை சுத்தம் செய்து அலச மிக அதிக மணமுள்ள சோப்பினை பயன்படுத்திக் கூடாது.
 

​மருத்துவ ஆலோசனை:

பெண்களுக்கு யோனி பகுதியில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்கள் இருக்குமாயின் தயக்கம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தேய்வு படுத்திக்க கொள்ள வேண்டும். தவிர உடலுறவுக்குப் பிறகு உங்களுக்கு ஏதேனும் அசவுகரியம் அல்லது வலி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மகளிர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொள் ளலாம். பாதுகாப்பான உடலுறவு கடைபிடிக்காவிட்டால் பால்வினை தொற்று நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆபாச படங்கள் பார்ப்பதால், உங்கள் செக்ஸ் லைப் பாதிப்பாகும் ? ஷாக்கிங்கா இருக்குல்ல!

Latest Videos

click me!