உடலுறவுக்கு எமனாகும் ஆணுறைகள்! இப்படி பயன்படுத்தினால் பிரச்சனை வரும்

First Published | Jan 18, 2023, 3:48 PM IST

ஆணுறையை அணிந்து உடலுறவு கொள்ளும்போது கொண்டாட்ட மனநிலையோடு ரசித்து அனுபவிக்க முடியவில்லையா? அது ஏன் என்று இக்கட்டுரையை படித்து புரிந்து கொள்ளுங்கள். 

ஆணுறைகள் குறித்து சுதந்திரமாக மக்கள் பேசி கொள்வதில்லை. ரகசியமான உரையாடல்களில் நகைச்சுவையாக சிலர் ஆணுறைகள் குறித்து பேசுவதோடு சரி. கணவன், மனைவி உரையாடல்களில் கூட அதன் பயன்பாடு குறித்து பேசுவதில்லை. சிலர் மருந்து கடைகளில் கேட்க வெட்கப்பட்டு ஆணுறை வாங்கி பயன்படுத்துவதில்லை. ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை சரியாக புரிந்து கொள்வது அவசியம். கருத்தடையாகவோ, பால்வினை நோய்களைத் தவிர்ப்பதற்காகவோ வாங்கினால் அதற்கு தகுந்தது போல தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு வகையான ஆணுறைகள், அவற்றின் பண்புகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

லேடெக்ஸ் ஆணுறை 

இயற்கை ரப்பரிலிருந்து லேடெக்ஸ் ஆணுறைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனை முறையாகப் பயன்படுத்தினால், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். விரும்பாத கர்ப்பத்தையும் குறைக்கலாம். சிலருக்கு இந்த லேடெக்ஸ் ரப்பர் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் இந்த ஆணுறைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் அரிப்பு, வெடிப்புகள் உண்டாகும். இந்த ஆணுறைகளை எண்ணெய் சார்ந்த லூப்ரிகண்ட், வாஸ்லைன் அல்லது பேபி ஆயில் போன்றவையுடன் உபயோகம் செய்தால் வழுக்கும். அதற்கு பதிலாக நீர் சார்ந்த லூப்ரிகண்ட் பயன்படுத்தலாம். 

மெல்லிய ஆணுறை 

மெல்லிய மரப்பால் செய்யப்பட்ட ஆணுறைகள் உடலுறவின் போது அதிக உணர்வை அளிக்கும். தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுப்பதில் உதவும். மெல்லிய, மிக மெல்லிய ஆணுறைகள் அணிவது வசதியாகவும், லூப்ரிகேஷன் இல்லாமல் அணியும் வகையிலும் கிடைக்கும். சிலர் தடிமனான ஆணுறைகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும். மெல்லிய ஆணுறைகள் அணிவது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம். 

சரியான சைஸ் ஆணுறை 

ஆணுறை மிகவும் சிறியதாக இருந்தால் கிழியலாம். இறுக்கமாக இருப்பதால் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதே நேரம் மிகவும் பெரியதாக இருந்தால், அது எளிதில் நழுவும். நீங்கள் ஆணுறை வாங்கும்போது அளவைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களுக்கு ரப்பருக்கு ஒவ்வாமை இல்லை எனில், லேடக்ஸ் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது. அது மிகவும் அகலமானது. உங்களுடைய உறுப்பின் அளவை பொறுத்து தேர்வு செய்யுங்கள். 

பாலிசோபிரீன் ஆணுறை 

அங்கீகரிக்கப்பட்ட செயற்கை ரப்பரின் வடிவத்தை தான் பாலிசோபிரீன் என்கிறோம். லேடெக்ஸில் உள்ளது போல் ஒவ்வாமை ஏற்படுத்தும் புரதங்கள் இதில் இல்லை. இவை மென்மையானவை. ஆனாலும் அவை கிழிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. லேடக்ஸ் ஆணுறை போல இவை விரிவடைகின்றன. பரவும் பால்வினை நோய்களில் இருந்து இந்த ஆணுறை உங்களை பாதுகாக்கும். பாலிசோபிரீன் ஆணுறைகள் தடிமனாக இருப்பதால் சிலர் அதைப் பயன்படுத்த தயங்குகின்றனர். 

விந்தணு கொல்லி ஆணுறை

விந்தணுக்களை செயலிழக்கச் செய்யும் ஆணுறைகளில் அதற்காக ரசாயனம் பூசப்பட்டுள்ளது. இது அவசியமில்லா கர்ப்பத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இந்த ரசாயனப் பொருள் மசகு எண்ணெய் போல செயல்படும். சில நேரங்களில் யோனி அல்லது யோனியின் மேற்புறத்தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது எச்.ஐ.வி அல்லது பரவும் பால்வினை நோய்களை (STI) பரவாமல் தடுக்கிறது. 

ஆட்டுக்குட்டியின் குடலில் இருந்து எடுக்கப்படும் மெல்லிய சவ்வில் செய்யப்படும் ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க உதவுகிறது. இதனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ளது. 

ப்ளேவர்ஸ் ஆணுறையால் சிக்கல்! 

ப்ளேவர்ஸ் உள்ள வெவ்வேறு வகையான ஆணுறையை பயன்படுத்தினால் இனப்பெருக்க உறுப்பில் PH அளவு அதிகரிக்கும். இதனால் உங்களுடைய துணையின் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று வரலாம். இதனால் எரிச்சல், அரிப்பு ஆகியவை வரலாம். ஆகவே இந்த ஆணுறைகளை பயன்படுத்தக் கூடாது. இவை வாய்வழி உறவின்போது பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவை. ஆணுறைகள் பால்வினை நோயிலிருந்து நம்மை பாதுகாத்தாலும், சில நேரங்களில் மட்டுமே கருத்தடையை ஆதரிக்கின்றன. எப்போதும் 100% ஆணுறைகள் பலன் தரும் என எதிர்ப்பார்க்க முடியாது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். 

Tap to resize

மெல்லிய ஆணுறை 

மெல்லிய ஆணுறைகள் உடலுறவின் போது அதிக உணர்வை அளிக்கும். மெல்லிய, மிக மெல்லிய தன்மை கொண்ட ஆணுறைகள் அணிவது வசதியாக இருக்கும். இவை லூப்ரிகேஷன் இல்லாமல் அணியும் வகையிலும் கிடைக்கும். சிலர் தடிமனான ஆணுறைகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும். மெல்லிய ஆணுறைகள் அணிவது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம். 

சரியான சைஸ் ஆணுறை 

ஆணுறை மிகவும் சிறியதாக இருந்தால் கிழியலாம். இறுக்கமாக இருப்பதால் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதே நேரம் மிகவும் பெரியதாக இருந்தால், அது எளிதில் நழுவும். நீங்கள் ஆணுறை வாங்கும்போது அளவைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களுக்கு ரப்பருக்கு ஒவ்வாமை இல்லை எனில், லேடக்ஸ் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது. அது மிகவும் அகலமானது. உங்களுடைய உறுப்பின் அளவை பொறுத்து தேர்வு செய்யுங்கள். 

விந்தணு கொல்லி ஆணுறை

விந்தணுக்களை செயலிழக்கச் செய்யும் ஆணுறைகளில் அதற்காக ரசாயனம் பூசப்பட்டுள்ளது. இது அவசியமில்லா கர்ப்பத்திற்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இந்த ரசாயனப் பொருள் மசகு எண்ணெய் போல செயல்படும். சில நேரங்களில் யோனி அல்லது யோனியின் மேற்புறத்தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது எச்.ஐ.வி அல்லது பரவும் பால்வினை நோய்களை (STI) பரவாமல் தடுக்கிறது. 

ஆட்டுக்குட்டியின் குடலில் இருந்து எடுக்கப்படும் மெல்லிய சவ்வில் செய்யப்படும் ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க உதவுகிறது. இதனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ளது. 

பாலிசோபிரீன் ஆணுறை 

அங்கீகரிக்கப்பட்ட செயற்கை ரப்பரின் வடிவத்தை தான் பாலிசோபிரீன் என்கிறோம். லேடெக்ஸில் உள்ளது போல் ஒவ்வாமை ஏற்படுத்தும் புரதங்கள் இதில் இல்லை. இவை மென்மையானவை. ஆனாலும் கிழிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. லேடெக்ஸ் ஆணுறை போல இவை விரிவடைகின்றன. பரவும் பால்வினை நோய்களில் இருந்து இந்த ஆணுறை உங்களை பாதுகாக்கும். பாலிசோபிரீன் ஆணுறைகள் தடிமனாக இருப்பதால் சிலர் அதைப் பயன்படுத்த தயங்குகின்றனர். 

ப்ளேவர்ஸ் ஆணுறையால் சிக்கல்! 

ப்ளேவர்ஸ் உள்ள வெவ்வேறு வகையான ஆணுறையை பயன்படுத்தினால் இனப்பெருக்க உறுப்பில் PH அளவு அதிகரிக்கும். இதனால் உங்களுடைய துணையின் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று வரலாம். இதனால் எரிச்சல், அரிப்பு ஆகியவை வரலாம். ஆகவே இந்த ஆணுறைகளை பயன்படுத்தக் கூடாது. இவை வாய்வழி உறவின்போது பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவை. ஆணுறைகள் பால்வினை நோயிலிருந்து நம்மை பாதுகாத்தாலும், சில நேரங்களில் மட்டுமே கருத்தடையை ஆதரிக்கின்றன. எப்போதும் 100% ஆணுறைகள் பலன் தரும் என எதிர்ப்பார்க்க முடியாது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். கவனமாக பயன்படுத்துங்கள். 

Latest Videos

click me!