ஆண்களுக்கு காதல் முக்கியமா..? காமம் முக்கியமா?

First Published | Feb 2, 2023, 9:34 PM IST

பாலுறவு சார்ந்த நடைமுறைகளில் ஆண்களுக்கு பெண்களை விடவும் மாறுபட்ட கண்ணோட்டம் இருக்கிறது. சிலருக்கு காதல் தான் முக்கியம், அதற்கு தான் உயர்ந்த முன்னுரிமை. இன்னும் சிலருக்கு உடலுறவுக்கு பின் தான் எல்லாம். இதற்கிடையில் ஒரு வகை உண்டு, அவர்களுக்கு செக்ஸ் மற்றும் காதல் இரண்டும் ஒன்றுதான்.  பொதுவாக பாலுறவு என்பது, உறவில் எந்தவிதமான தீர்மானம் இல்லாமல் ஏற்படுவது. அது யாருடனும் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் காதல் அப்படியில்லை. அதற்கு சில காரண காரியங்கள் எல்லாம் உண்டு. இந்தியாவில் இரண்டையும் வேறுபடுத்தி பார்த்து கருத்து சொல்வது கடினம் தான்.  உண்மை என்னது? என்று தெரிந்திருந்தாலும், அதை ஏற்க நம்மால் முடியாது. எனினும் ஆண்களின் தேர்வு காதலா? காமா? என்பது குறித்து 4 பேர் அளித்த கருத்துக்களின் அடிப்படையில், இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது

பாலுறவு தான் முக்கியம்

மும்பையைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரிடம், இந்த கேள்வியை முன்வைத்தோம். ஐ.டி துறையில் பணியாற்றி வரும் அவர், இதுதொடர்பான விளக்கங்களை நிதர்சனமான பார்வையில் முன்வைத்தார்.

ஒரு உறவுக்கு செக்ஸ் முக்கியமில்லை என்ற ஒருவர் கூறினால், அது முற்றிலும் பொய்யாகும். காதல் உறவில் ஒரு ஆண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாலுறவு என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நபர் ஆரம்பத்தில் யாரோ ஒருவரிடம் உடல் ரீதியாக ஈர்க்கப்படுகிறார், இது பெரும்பாலும் செக்ஸ் பற்றிய எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், இந்த உணர்வு தான் காதல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. உடல் ரீதியாக ஈர்ப்பில்லாமல் யாரு மீதும் காதல் வராது என்பது தான் நிதர்சனம்.

காதலுக்கு மரியாதை

மும்பை இளைஞரின் கருத்தை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் எதிர்கொண்டார், வேலூரைச் சேர்ந்த ஆசிப். சென்னையில் வங்கி துறையில் பணியாற்றி வரும் இவருக்கு வயது 31. நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை சமீபத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

காதல் உறவு காமத்துக்கும் மேலானது. உறவின் கட்டமைப்பில் காமத்துக்கும் ஒரு பங்கு உள்ளது. ஆனால் அன்பு, பாசம், அக்கறை, பரிவு, துணை போன்ற தேவைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு. சோர்வாகவும் விரக்தியுடனும் இருக்கும் துணையை தூக்கிவிடவும் ஊக்கப்படுத்தவும் இன்னொரு துணை தான் வேண்டும். அப்போது பாலுறவு என்பது நினைவில் இருக்காது. அங்கு பாசத்துக்கும் நேசத்துக்கும் தான் மதிப்பு. வாழ்க்கையில் தொடர்ந்து செயல்பட ஊக்கம் தான் தேவை. அப்போது ஆணுக்கு பாலுறவு என்பது முன்னுரிமை கிடையாது.
 


உறவுக்கு தன்னம்பிக்கை தேவை

இருப்பதைந்து வயதான, இன்னும் திருமணமாகாத, காதலியும் இல்லாத சஷாங்க் இந்த கேள்வியை வேறுகோணத்தில் எதிர்கொண்டார். 

சில நேரங்களில் ஆண்கள் காதலை விட உடலுறவை விரும்புகிறார்கள். ஏனென்றால் அதன்மூலம் காதல் மீதும், அவர்கள் காதலிப்பவர்கள் மீதும் நம்பிக்கை அதிகரிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். ஒரு ஆண் என்பதால், ஒரு பெண்ணுடன் உடலுடன் தீண்டும் போது, நான் சுயமரியாதையை உணர்கிறேன். அது எனக்கானது என்பன போன்ற உணர்வு ஏற்படுகிறது. அது மகத்தானது. காதல் சில சமயங்களில் காயப்படுத்தலாம். ஆனால் உடலுறவு என்பது எளிதாக நடக்கக்கூடிய ஒன்று. அதன்காரணமாக நான் உடலுறவை விரும்புகிறேன்.

போனிலேயே மூழ்கிக் கிடப்பதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகுகிறீர்களா..?? இதை படியுங்கள்..!!

காதல் நான் நிலைத்து நிற்கும்

இரண்டு குழந்தைகளுடன், 21 ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் 42 வயதான ரோஹன், தன்னுடைய அனுபவங்கள் மூலம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு மேலும் வயதாகும் போது, தம்பதிகள் அல்லது காதலர்களும் உடலுறவில் ஈடுபடு பெரியளவில் ஆர்வம் இருக்காது. அன்புக்கும் உணர்ச்சிக்கும் மதிப்பளித்தால் மட்டுமே வயோதிகம் பூரணமாகும். ஒரு வயதில், செக்ஸ் தொலைதூர நினைவாக மாறும். எனவே, எந்த நாளிலும் நான் உடலுறவை விட காதலை தேர்வு செய்வேன். மேலும், இது மகிழ்ச்சியான திருமணத்தின் ரகசியமும் கூட.

Latest Videos

click me!