'வெளிச்சதுல தான் செக்ஸ் நல்லது' மனம் திறக்கும் தம்பதிகளின் அனுபவங்கள்!!

First Published | May 9, 2023, 4:30 PM IST

பல தம்பதிகள் இருட்டில் உடலுறவு கொள்வதை விட வெளிச்சத்தில் உறவு கொள்ளவே விரும்புகிறார்கள். ஏனென்று தெரியுமா? சில காரணங்கள் உள்ளே... 

உடலுறவில் பல நன்மைகள் கிடைக்கும். சில தம்பதிகள் இருட்டில் உடலுறவு கொள்ள விரும்புவார்கள். சிலர் வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள். சிலருக்கு வெளிச்சத்தில் உடைகளை அவிழ்ப்பது சங்கடமாகவும், கூச்சமாகவும் இருக்கும். வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள சற்று வெட்கப்படுவார்கள். ஆனால் சில தம்பதிகளோ வெளிச்சத்தில் உடலுறவை மிகவும் ரசிப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் பகிரும் ரகசிய சம்பவங்களை இப்போது தெரிந்து கொள்வோம். 

ஏன் மறைக்கணும்? 

உருவத்தைப் பொருட்படுத்தாமல், நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறோம். காதலிக்கும்போது ஒருவரையொருவர் வெற்று உடலாக பார்க்க விரும்பினோம். என் காதலி எப்போதும் வெளிச்சத்தை குறித்து கவலைப்படவில்லை. இதனால் எனக்கும் நிர்வாணமாக இருப்பதில் ஒரு சுதந்திர உணர்வும், நம்பிக்கையும் வந்தது. வெளிச்சத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டோம். 


முகம் காட்டு நீ! 

"என் மனைவி சில இடங்களில் மென்மையான தொடுதலை விரும்புகிறார். நான் அவளுக்கு என்ன செய்கிறேன் என்று பார்க்க விரும்புகிறேன். அவளுடைய திருப்தியை, உணர்வை காண விரும்புகிறேன். அதனால் நான் வெளிச்சத்தில் உடலுறவு கொள்ள விரும்புகிறேன். நான் அவளை தொடும்போது அவளுடைய முகம் பாவனைகளை பார்க்க விரும்புகிறேன்"

பாதுகாப்பு 

"உடலுறவின் போது பாதுகாப்பாக இருப்பதில் நானும் எனது காதலனும் மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆணுறை அணிவதில் எந்த தவறும் நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம். அவர் பேச்சிலர். அதனால் எங்களை சுற்றியுள்ள அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். உடலுறவு கொள்ளும்போது துர்நாற்றம் வீசும் ஷூ அல்லது சாக்ஸ் அணிவது எனக்குப் பிடிக்காது. அதை தவிர்க்க அறிவுறுத்துவேன். சுத்தமாக கவனமாக உறவு கொள்ள வெளிச்சம் தேவை"

மகிழ்ச்சி 

"வெளிச்சததில் தம்பதியினர் உடலுறவு கொண்டால் முகபாவங்கள், சொதப்பல்கள் உள்ளிட்டவை சிரிப்பை வரவழைக்கும். சிறிது நேரம் சிரிக்கலாம். அப்போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். நானும் எனது துணையும் விளக்குகளை ஒளிரவிடுவோம். வெளிச்சத்தில் துணிகளை விலக்க விரும்புகிறோம். ஏனென்றால் அது நம்மை சிந்திக்க, ரசிக்க வைக்கிறது. இது வேடிக்கையாகவும் இருக்கும். ஆனால் வெளிச்சம் நமக்கு ஒரு ஆசீர்வாதம் போன்றது" 

விளக்குகளை போட்டுக்கொண்டே உறவு கொள்வது ஒவ்வொரு நபர்களுக்கும் வித்தியாசப்படும். உங்கள் துணை இருளை விரும்பினால் கட்டாயப்படுத்த வேண்டாம். இருவருக்கும் விருப்பம் இருந்தால் முயன்று பாருங்கள்.  

Latest Videos

click me!