கணவன் மனைவிக்குள் இந்த 5 விஷயங்களை பேசுங்க..! அப்புறம் செக்ஸ் வாழ்க்கை வேற மாதிரி மாறிடும்.!

First Published | Mar 27, 2023, 4:27 PM IST

செக்ஸ் உறவு கொள்ளும் போது உச்சக்கட்டத்தை (orgasm) அடைய, உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டிய 5 விஷயங்களை குறித்து இந்த பதிவில் காணலாம். 

பாலியல் உறவில் இன்பம், கூடுதல் உற்சாகத்தை அடைய துணையுடன் உரையாடுவது அவசியம். எதை பற்றி தெரியுமா? பாலியல் செயல்பாடுகளைப் பற்றி தான். இதை குறித்து பேச முடியாவிட்டால்.. இதுவரை உங்களுக்குள் வெளிப்படையான தாம்பத்தியம் இல்லை என்று பொருள். எந்த இடத்தில் தொட்டால் உச்சம், எந்த இடத்தில் கிள்ளினால் பாலுணர்வு தூண்டப்படும், எந்த பொசிஷன் வேண்டும் என இயல்பாகவே பாலியல் உறவு, உணர்வுகளை உரையாடும் வெளியை (space) உறவு கொள்ளும் நபர்கள் (couple) ஏற்படுத்தியிருக்க வேண்டும். செக்ஸில் வெளிப்படைத்தன்மை முக்கியம். 

பெண்கள் தங்கள் உணர்ச்சிகளைக் குறித்து சிந்திக்க வேண்டும். உங்கள் துணையிடம் நீங்கள் அனுதாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதைப் பற்றி வெளிப்படையாக கூற வேண்டும். அது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பதிவில் செக்ஸ் உறவு கொள்ளும் போது உச்சக்கட்டத்தை (orgasm) அடைய, உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டிய 5 விஷயங்களை குறித்து காணலாம். 


நகங்கள் வேண்டாம்..! 

நகக்கீறல்கள் உச்சக்கட்டத்தில் உடலில் பதியும் தடங்கள். ஆனால் போர்பிளே செய்யும் போது 'ஒரு விரல்' முக்கிய பங்கு பெறுகிறது. அதனால் உறவில் உபயோகம் செய்யும் விரல்களில் மட்டுமாவது நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள். கர்ப்ப கால பெண்களுக்கு வலி இல்லாமல் உச்சம் அடைய விரல் தான் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், நகங்கள் பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. நகங்களிலும் உள்ளங்கைகளிலும் ஆயிரக்கணக்கான கிருமிகள், பாக்டீரியாக்கள் இருப்பதால் செக்ஸ் கொள்ளும் சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில் பிறப்புறுப்பு தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. நகங்கள் கூர்மையாக இருந்தால், தோல் கிழியும் வாய்ப்பு உள்ளது. அதனால் நகம் வளர்க்கக் கூடாது. 

வாய் வழி உறவு (oral sex)  

பெரும்பாலான பெண்கள் கூச்சம் கொண்டவர்கள். ஆண்களும் தான். தங்கள் துணையிடம் மனதில் இருப்பதை கூட சொல்ல மாட்டார்கள். ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்களுக்கு வாய்வழி உடலுறவு உச்சக்கட்டத்தை கொடுத்தால், அதை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், உங்கள் துணையிடம் சொல்லுங்கள். அதில் தூய்மையையும் கடைபிடிக்க வேண்டும். இதற்கு முன் உங்கள் யோனியை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். ஆண்களே நீங்களும் அதை போலவே துணையிடம் வெளிப்படையாகவும், ஆணுறுப்பை சுத்தமாகவும் வைத்து கொள்ளுங்கள். 

ஆணுறைகள், லூப்ரிகண்டுகள்

உங்கள் துணை ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள விரும்பினால், அப்போது நீங்கள் கண்டிப்பாக துணையுடன் பேச வேண்டும். ஏனெனில் இது தேவையில்லாத கர்ப்பம், பாலியல் நோய்களுக்கு (STIs) வழிவகுக்கும். ஆணுறை வேண்டாம் என சொல்லும் சில ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை பெண்களுக்கு பரிந்துரை செய்வார்கள். சில பெண்கள் அவர்களாகவே கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்வார்கள். ஆனால் அந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது எதிர்கால கருவுறுதலை பாதிக்கலாம். ஆணுறை அணிவதில் பக்க விளைவுகள் இல்லை. அதை அணியலாம். இது குறித்து துணையுடன் பேச வேண்டும். 

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு வலி இருந்தாலோ, உடலுறவில் ஆர்வம் இல்லையென்றால் கூட உங்கள் துணையிடம் அது குறித்து பேசுங்கள். உடலுறவு இருவர் மனம் உகந்து ஈடுபட்டால் தான் இன்பமாக இருக்கும். உங்களுக்கு வாய்வழி உடலுறவில் ஆர்வம் இல்லை, நீங்கள் அதை ரசிக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லி விடுங்கள். வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ள வேண்டிய அவசியமில்லை. வாய்வழி உறவுக்கு முன் அவர்களுடைய பிறப்புறுப்பில் பிரச்சனை இருந்தாலோ அல்லது துர்நாற்றம் ஏற்பட்டாலோ, வாய்வழி உடலுறவுக்கு கொள்ளும் முன் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்ய உங்கள் துணையிடம் சொல்லுங்கள். தயங்க வேண்டாம். வாய்வழி உடலுறவில் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. 

பொசிஷன் முக்கியம்..! 

பெண்கள் தங்களுடைய கூச்சம் அல்லது தங்கள் துணை தவறாக நினைக்கக் கூடும் என தங்கள் விருப்பங்களை உடலுறவின்போது வெளிப்படுத்துவதில்லை. உடலுறவின் போது உங்கள் இருவருக்கும் பிடித்த நிலைகளை (position) முயற்சி செய்யலாம். இது குறித்து இருவரும் வெளிப்படையாக கேட்க வேண்டும். எந்த கோணத்தில் எந்த நிலையில் நீங்கள் உச்சமடைகிறீர்கள் (orgasm) என்பதை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இதைப் பற்றி உங்கள் துணையிடம் பேசுங்கள். உடலுறவின் போது இன்பம் தராத நிலையையும் மாற்ற துணையிடம் கேட்கலாம். தவறில்லை. நலம் வாழுங்கள். 

Latest Videos

click me!