இதழ் முத்தத்தில் இப்படி ஒரு ஆபத்தா? இனி ரொமாண்ஸ் பண்ணுறப்ப கவனம்...

First Published | Jan 20, 2023, 1:59 PM IST

வாய் சுகாதாரத்தில் கவனம் கொள்ளாமல் இதழில் முத்தம் கொடுத்தால் வரும் பிரச்சனைகள் குறித்து இங்கு காணலாம். 

முத்தங்களை பரிமாறி கொள்ளும் போது காதலும், நெருக்கமும் அதிகரிக்கும். அதுவும் இதழ் முத்தம் கொடுக்கும்போது துணையுடன் கூடுதல் இன்பமாக இருக்க முடியும். இதழ் முத்தம் இல்லாத காதல், இனிப்பு போடாத பண்டங்கள் போலவே ருசிக்காது. 

இதழ் முத்தம் கொடுக்கும்போது சில ஆபத்தும் நடக்கும் வாய்ப்புள்ளது. பாதுகாப்பு இல்லாத வாய்வழி புணர்ச்சி (oral sex) அல்லது நேரடி பாலியல் உறவு போன்றவை பாலியல் ரீதியான நோய்கள் பரவ வழி வகுக்கும். வாயில் உள்ள பிரச்சனைகள் பாலியல் நோயின் அறிகுறிகளாக இருக்கும்போது, உங்களுடைய துணைக்கும் பரவலாம். வாய் சுகாதாரம் இல்லையென்றால் வரும் ஆபத்து குறித்து இங்கு காணலாம். 


வாயில் பாக்டீரியா தொற்று இருக்கும் நபராக நீங்கள் இருக்கும்போது, உங்கள் துணையின் இதழில் முத்தமிட்டால் அவருக்கும் பாதிப்பு ஏற்படும். எச்சில் வழியாக கிட்டத்தட்ட 80 மில்லியன் பாக்டீரியா பரவுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாக்டீரியா அல்லது வைரஸ் மூலம் பரவும் வாய் சார்ந்த நோய்களை விடவும் அதிக பிரச்சனைகள் வாய்வழி முத்தத்தில் பரவுகிறது. 

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பை சுற்றி இப்படி இருக்குதா? உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்கலாம்

ஸ்டிரெப்டோகோகஸ் மூடன்ஸ் பாக்டீரியா வழியாக பூச்சிப்பல் எனும் பற்சிதைவு ஏற்படலாம். இது உற்பத்தி செய்யும் அமிலம் பற்களில் சிதைவை ஏற்படுத்திவிடுகிறது. இதழ் முத்தம் வழியாகவே இந்த பாக்டீரியா பரவுகிறது. 

இதழ் முத்தம் கொடுத்த பிறகு ஈறு வீக்கம் ஏற்பட்டால் அலட்சியம் செய்யக் கூடாது. இது ஒரு வருடத்தில் மிகுந்த பாதிப்புகள் உண்டாக்கும். ஒருவரிடமிருந்து இந்த பாக்டீரியா வாயில் உள்புகுந்தால், அவர்களது ஈறுகளை அரிக்கத் தொடங்கும். இது ஈறுகளில் எரிச்சல், வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். 

உடலுறவை போல முத்தங்களை பாதுகாப்பான வழியில் செய்ய முடிவதில்லை. அவை நேரடி தொடர்பு கொண்டுள்ளன. உங்களுக்கு காய்ச்சல், சளி, டான்சிலிட்டிஸ் போன்ற தொற்றும் நோய்களும், பரவும் பாலியல் ரீதியான நோய்களும் (STD) இருந்தால் உங்கள் இணையை முத்தமிடாதீர்கள். 

இதையும் படிங்க: பித்ரு சாபம் நீக்கும் தை அமாவாசை தர்ப்பணம்.. எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? தானம் அருளும் புண்ணியம்

Latest Videos

click me!