புரிதலுடன் கூடிய தாம்பத்தியம்
பழைய காலங்களில் கூட்டுக்குடும்பங்களில் தான் இல்லறம் துவங்கியது. அப்போது ஒளிவு மறைவாகவும், தனித்து இருந்து தம்பதிகள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் இன்று நம்மில் பலரும் தனிக்குடித்தனம் செய்கிறோம். போதிய தனிப்பட்ட நேரம், இடவசதி உள்ளிட்டவை இருந்தாலும் தாம்பத்தியம் சிறப்பாக இருப்பதில்லை. இதற்கு காரணம் கணவன் மனைவி என்பதை மறந்துவிட்டு, தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமே. தாம்பத்தியத்தில் இருக்கும் மகிழ்ச்சி வாழ்க்கை முழுவதும் நிலைக்க இருவரும் ஒன்றுகூடுவது அவசியம். விருப்பு மற்றும் வெறுப்புகளை பேசி, அதனுடன் ஏற்படும் புரிதல் வாழ்வு முழுமைக்கும் தொடர்ந்தால் இல்லறம் நல்லறமாகும்.
குழந்தை வளர்ப்பு காரணம் அல்ல
இன்றைய நவீன உலகில் தாம்பத்தியத்தில் சிக்கலை சந்திக்கும் இளம் தலைமுறையினர், பிரச்னைக்கு காரணமாக குழந்தையை குறிப்பிடுவது பரவலாக உள்ளது. குழந்தையின் வருகைக்கு பிறகு தாம்பத்தியம் மாறுபடும் என்பது உண்மை தான். முன்னர் எப்போது வேண்டுமானாலும் சந்தோஷமாக இருக்கலாம், ஆனால் குழந்தை என்றான பிறகு தாம்பத்தியத்துக்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும். தாம்பத்தியத்தை சிறக்க வைக்க பிறந்தது தான் குழந்ததை. அதனால் குழந்தையின் வருகை உறவை வலுப்படுத்த மட்டுமே அன்றி, உறவை பிரித்தாளுவதற்கு அல்ல. மேலும் குழந்தை வளர்ப்பு என்பது கணவன் மற்றும் மனைவி இருவருக்குமான பொறுப்பு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
relationship
தற்போது கணவன், மனைவி இருவருமே பணிக்கு செல்கின்றனர். வீட்டுக்கு வந்த பிறகு களைப்புடன் காணப்படும் மனைவியை உடலுறவுக்கு கணவன்மார்கள் வற்புறுத்தக்கூடாது. மிரட்டலுக்கு அடிபணிந்து மனைவிகள் உறவுக்கு சம்மதித்தாலும், அது நாளடைவில் தாம்பத்தியத்தின் மீது வெறுப்பை அதிகரிக்கும். அதனால் களைப்புடன் காணப்படும் மனைவிக்கு கணவர் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இது அன்பான தாம்பத்தியத்துக்கு அடித்தளமாக மாறும். அதை தொடர்ந்து ஏற்படும் மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்வை மேலும் அழகாக்கும் என்பது மறுக்கமுடியாத நிதர்சனம்.
நிறை, குறை சேர்ந்தது தான் வாழ்க்கை
இறுதிவரை ஒன்றாக இணைந்து வாழப்போவது நாம் தான் என்பதை கணவன், மனைவி முடிவாக தெரிந்துகொள்ள வேண்டும். வெளியாட்களால் உருவாகும் பிரச்னையை கணவன், மனைவி உறவுக்குள் கொண்டுவந்து விவாதிக்கக்கூடாது. எப்போது குறைகளை சுட்டிக்காட்டி பேசுவது வெறுப்பை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு தம்பத்திகள் தங்களுடைய துணையின் இயல்பை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் எப்படிப்பட்ட பிரச்னை என்றாலும், நம்முடைய கணவன் அல்லது மனைவி நமக்கு எதிராக செயல்படப்போவது கிடையாது என்கிற நம்பிக்கையை விதைக்கும்.