நவீன யுகத்தில் மின்சாரத்தின் பங்கு
நவீன காலகட்டத்தில் மின்சாரம் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. மின்சாரம் இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும் என்ற நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விட்டனர். சமையல், பொழுதுபோக்கு, வேலை என எங்கு பார்த்தாலும் மின்சாரத்தின் பங்கு அதிகமாக உள்ளது. முன்பு பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் மனிதன் அன்றைய பொழுதை கழித்து விடுவான். ஆனால் தற்போது ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத நிலையானது உருவாகியுள்ளது.