நடிகர் விஷால் ரத்னம் படம் ரிலீஸ் ஆகும் சமயத்திலேயே தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாக பேசினார். என் படம் ரிலீஸ் ஆவதை தடுக்க நீங்க யாரு என நேரடியாகவே கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுக அரசின் தலையீடு சினிமாவில் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
24
Vishal slams DMK
அதுகுறித்து அவர் பேசியதாவது : “தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் மிகவும் கடினமானது. காரணம், நிறைய படங்களை யாரும் வாங்க முன்வருவதில்லை. சின்னப் படங்களுக்கு அதுக்கான இடமில்லை. அடுத்து வரும் மாதங்களில் 10 பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த 10 படங்களும் தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ்னு அவங்கங்க ஸ்பாட்டை எடுத்துக்கொண்டார்கள். இதனால் சின்னப்படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும், என்பது ஒரு கேள்விக் குறியாக உள்ளது.
இருந்தாலும் நல்ல படங்கள் ரிலீஸ் ஆனால் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் இந்த வருடம் வியாபார ரீதியாக சினிமா துறைக்கு ஒரு கஷ்டமான ஒரு ஆண்டாகவே இருக்கும். அரசு ஏன் சினிமாவுக்குள் வர வேண்டும். போன அரசு சினிமாவுக்குள் வரவே இல்லை. அவங்க சினிமாவுக்குள் வரவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பொதுப்பணித்துறையை கவனித்துக் கொண்டாலே போதும், எதுக்கு உங்களுக்கு சினிமா துறை வேணும். அது அதுவாகவே இருக்கட்டும்.
44
Actor Vishal
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, நான் வரணுமா வேண்டாமானு மக்கள் சொல்லனும். இறங்கனும்னு அவங்க முடிவு பண்ணிவிட்டால் வேறுவழியில்லை. மக்களுக்காக பண்ணனும். நான் ஷூட்டிங் செல்லும்போது குடிநீர் வசதி இல்லாமல் ஒரு கிராமம் இருந்தது. சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் இல்லாம ஒரு கிராமம் இருக்குன்னும் சொன்னா அதை பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. இதுமாதிரி இல்லாமல் இருந்தால் என்னைப்போன்ற நடிகர்கள் நடிகர்களாகவே இருந்துவிடுவோம். அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆவதால் தான் நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள்” என விஷால் கூறினார்.