ஐபிஎல் இறுதிப் போட்டி - மோசமான சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 113 ரன்களுக்கு சரண்டர்!

First Published | May 26, 2024, 9:27 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழ்ந்தார். வைபவ் அரோரா வீசிய 2ஆவது ஓவரில் டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் முறையில் வெளியேறினார்.

Tap to resize

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இந்த சீசனில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் முறையே 0(1), 0(2), 34(28), 0(1) என்று ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதையடுத்து ஸ்டார்க் வீசிய 5.2ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி 9 ரன்களில் நடையை கட்டினார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இவரைத் தொடர்ந்து இன்று தனது 21ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். அவர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக எய்டன் மார்க்ரம் 23 பந்துகளில் 3 பவுண்டரி அடித்த நிலையில் ஆண்ட்ரே ரஸல் பந்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து ஹென்ரிச் கிளாசென் மற்றும் ஷாபாஸ் அகமது இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், ஷாபாஸ் அகமது பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் 8 ரன்னில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் பிளேயராக வந்த அப்துல் சமாத் 4 ரன்களில் நடையை கட்டினார். பெரிதும் நம்பப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

அப்போது ஹைதராபாத் அணியானது 14.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்கவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final

இதன் மூலமாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் 125 ரன்கள் மட்டுமே குறைவான ஸ்கோராக இருந்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Latest Videos

click me!