Ponni : பொன்னி சீரியலில் இருந்து திடீர் என விலகிய பிரபல நடிகை! அதிரடியாக உள்ளே வந்த சன் டிவி சீரியல் நடிகை!

Published : Jun 13, 2024, 09:13 PM IST

விஜய் டிவியில் சுமார் 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும், பொன்னி சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

PREV
14
Ponni : பொன்னி சீரியலில் இருந்து திடீர் என விலகிய பிரபல நடிகை! அதிரடியாக உள்ளே வந்த சன் டிவி சீரியல் நடிகை!

வித்தியாசமான கதை களத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல், மிஸ் பண்ணுபவர்கள் கூட, தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்... டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தங்களுக்கு விருப்பமான சீரியலை கண்டு கழிக்கிறார்கள்.

24

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் பொன்னி சீரியல் இளம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவுடன், வெற்றிகரமாக 300 எபிசோடுகளுக்கு கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த தொடர் பெங்காலியில் பிரபலமான Gaatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

Vijay TV Serial Climax: ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சூப்பர் ஹிட் தொடர்! எந்த சீரியல் தெரியுமா?

34

மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில், 'ராஜா ராணி 2' சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வைஷு சுந்தர் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக சபரிநாதன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

44

இந்த சீரியலில் முதலில் கதாநாயகனின் அம்மாவாக ஷமிதா நடித்து வந்த நிலையில்... அவர் பர்சனல் காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதில் சீரியல் நடிகை சிந்துஜா விஜி (ஜெயலட்சுமி) கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இவரும் இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், இவருக்கு பதிலாக சன் டிவியில் ஆனந்த ராகம், விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்த ரிஹானா நடிக்கிறார்.

தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!

Read more Photos on
click me!

Recommended Stories