ரூ.200 கோடி சொத்து.. ஆடம்பர வீடுகள்.. பிரைவேட் ஜெட்.. தென்னிந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்..!

First Published | Feb 27, 2024, 10:37 AM IST

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் இந்த நடிகை பணக்கார தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி முதல் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா வரை, தென்னிந்திய நடிகைகள் பலர் இந்திய திரையுலகில் தடம் பதித்து வருகின்றனர். தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இந்த நடிகைகள், இன்றைய பான்-இந்திய சினிமாவின் சகாப்தத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நடிப்பு திறமை மட்டுமின்றி நடிகர்களுக்கு இணையாக சொத்துக்களை சேர்த்தும் வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் பணக்கார தென்னிந்திய நடிகை குறித்தும் அவரின் சொத்து மதிப்பு குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Nayanthara

தென்னிந்திய பணக்கார நடிகை வேறு யாருமில்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வரும் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளாள்ளார். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

Tap to resize

தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கூட ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருதை வென்றார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். 

பல காதல் தோல்விகளை சந்தித்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

நயன்தாரா நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். குறிப்பாக தென்னிந்திய பணக்கார நடிகை என்றால் அது நயன் தான். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரு.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.. அவருக்கு ரூ. 100 கோடி மதிப்புள்ள 4 BHK வீடு உள்ளது, சென்னை தவிர ஹைதராபாத், கேரளா, மும்பை என நாட்டின் முக்கிய நகரங்களில் 4 ஆடம்பர வீடுகளும் நயன்தாராவுக்கு சொந்தமாக உள்ளது. 

Nayanthara

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக கருதப்படும் நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

படங்களில் நடிப்பதை தாண்டி, கே பியூட்டி மற்றும் தனிஷ்க் உட்பட பல முக்கிய இந்திய பிராண்டுகளின் முகமாகவும் நயன்தாரா உள்ளார். ஒவ்வொரு விளம்பரத்திலும் நடிக்கவும் அவருக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

நயன்தாரா தனக்கென ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350டி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் மற்றும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் என ஆடம்பர் கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன. 

தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நயன்தாரா நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் சாய் வாலே என்ற பிரபலமான நிறுவனத்தில் நடிகை நயன்தாரா ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதில் இருந்தும் அவருக்கு வருமானம் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கினார்,

இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் என்று கூறப்படுகிறது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.. இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றையும் தனது நண்பருடன் சேர்ந்து  அவர் நடத்தி வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் 9Skin என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். இந்த தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த Femi 9 என்ற பெண்களுக்கான சானிடரி நாப்கின் பிராண்டையும் அறிமுகம் செய்தார். இப்படி சினிமா மட்டுமின்றி, பிசினஸிலும் நடிகை நயன்தாரா கலக்கி வருகிறார். 

Latest Videos

click me!