திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!

Published : Jul 02, 2024, 10:02 AM IST

உங்களுடைய திருமணத்திற்குப் பின்னர் சில விஷயங்களை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்வது சரியானது அல்ல.  அதனால் பல பிரச்சனைகள் வரும். 

PREV
16
திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!

நம்முடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் எப்போதும் தனிப்பட்டதாகவே இருக்கின்றன.  அதை நாம் கவனமாக கையாண்டால் மட்டுமே நம்முடைய வாழ்க்கை ரகசியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.  சிலரிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதால்  வாழ்க்கையில் பிரச்சனைகள் வெடிக்கும். அந்த வகையில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காணலாம். 

26

அந்தரங்கம் பத்திரம்:  உங்களுடைய பாலியல் வாழ்க்கை குறித்த விஷயங்களை எப்போதும் யாருக்கும் சொல்லாதீர்கள்.  அந்தரங்கமான விஷயங்கள் குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் உங்களுடைய மனைவி அல்லது கணவன் குறித்த தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். இது கணவன் மனைவிக்கு இடையே உள்ள நம்பிக்கையும், தனியுரிமையையும் காப்பாற்றாமல் மீறியது போன்ற நடவடிக்கை ஆகும். 

36

பொருளாதார விவரம் :  உங்களுடைய தனிப்பட்ட வருமானம், கடன், முதலீடு சேமிப்பு போன்ற நிதி விவரங்கள் குறித்து எப்போதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது குறித்து மற்றவர்களிடையே நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது தவறான புரிதல்களை ஏற்படுத்தும்.  சில நேரங்களில் தவறான ஆலோசனைகளை நீங்கள் கேட்க கூட நேரிடும். 

46

உறவு சிக்கல் :  உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்ப உறுப்பினரிடம் ஆலோசனை கேட்பது தவறில்லை. ஆனாலும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சில சிக்கல்கள் குறித்து எல்லோர் முன்பும் பேசுவதால் உங்கள் உறவில் விரிசல் பெரிதாகும். 

இதையும் படிங்க:  செக்ஸ் வைத்து கொள்ளும் முன்பு செய்யவே கூடாத விஷயம் என்ன தெரியுமா?

56

கடந்தகாலம்:   கடந்த கால உறவுகளை குறித்து பேசுவது தவிருங்கள். உங்களுடைய துணையின் கடந்தகாலம் குறித்து சொல்லி காட்டக்கூடாது. அதை குறித்து மற்றவர்களிடம் பகிரவேகூடாது. 

இதையும் படிங்க:  'என் மனைவி லெஸ்பியன்னு தோனுது.. அவர் பண்ற காரியங்கள் அப்படி இருக்கு' குழம்பும் வாசகருக்கு பதில்!!  

66

துணையின் விவரங்கள் :  உங்களுடைய வாழ்க்கை துணை குறித்த தகவல்களை ஒருபோதும் மற்றவர்களிடம் பகிராதீர்கள். அவர்களை குறித்த விவரங்களை மற்றவர்களிடம் பகிர்வது அவருடைய மரியாதைக்கு பங்கம் விளைவிப்பது போலாகும்.  

இந்த விஷயங்களை ஒருபோதும் யாரிடமும் பகிரவேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories