கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான தளபதி விஜயின் "நேருக்கு நேர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். தரமான பல படங்களை கொடுத்து அவர் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
பிரபல நடிகர் சூர்யா இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் பணியாற்றி வரும் "கங்குவா" மற்றும் "சூர்யா 44" ஆகிய இரு படத்தின் குழுவினரும், பிரத்தியேகமாக பல விஷயங்களை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
34
Vaadivaasal
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த "வாடிவாசல்" என்கின்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அந்த திரைப்படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாகவும், வெற்றிமாறன் அந்த கதையில் நடிக்க வேறு நாயகர்களை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது.
44
vetrimaaran
ஆனால் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அண்மையில் பேசிய ஒரு பேட்டியில், சூர்யாவின் அந்த திரைப்படம் ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. நானும் வெற்றிமாறனும், சூர்யாவும் அடிக்கடி பேசிக் கொண்டு தான் வருகிறோம். சில தொழில்நுட்ப ரீதியான பணிகளால் மட்டுமே அந்த படம் தடைபட்டு வருகின்றது. விரைவில் பிரம்மாண்டமாக அந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் துவங்கும் என்று ஆணித்தரமாக அவர் கூறியிருக்கிறார்.