Mirchi Senthil Kumar
அதாவது பாக்யம் இருவரையும் விருந்துக்கு அழைக்க, பரணி நான் வரமாட்டேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து பரணி தூங்கிய பிறகு சௌந்தரபாண்டி போன் செய்ய, சண்முகம் பரணியின் போனை எடுக்கிறான்.
சௌந்தரபாண்டி நாளைக்கு விருந்துக்கு லேட்டாவா என்று சொல்ல, சண்முகம் அதை கேட்டு விட்டு போனை கட் செய்து விடுகிறான். மறுநாள் காலையில் பரணி நான் விருந்துக்கு வர மாட்டேன் என்று சொல்ல தோழிகள் எல்லோரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
கடவுளை கண்டேன் ! சேரிப் புயல் திருமா.. அன்பானி - அதானியை விட்டு வைக்காத மன்சூர் அலிகானின் தடாலடி அறிக்கை!
Serial Actress Nithya Ram
வெளியில் கார் தயாராக இருக்க இதெல்லாம் உன்னுடைய திட்டம் தான் நான் கார்ல வரமாட்டேன் என்று சொல்லி நடந்து செல்ல ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் ஜோடி பொருத்தம் சூப்பர், சூர்யா ஜோதிகா மாதிரி இருக்கீங்க, சிவன் பார்வதி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து தள்ளுகின்றனர். பின்னாடியே வெட்டுக்கிளி இவ்வாறு சொன்னவர்களுக்கு பணம் கொடுத்து வர பரணி பார்த்துவிட்டு இது எல்லாம் உன் ஏற்பாடு தானா என கோபப்பட்டு காரில் ஏறி கொள்கிறாள்.
அதனைத் தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு வந்து இறங்க சௌந்தரபாண்டி வெளியே போறேன் என சொல்லி வெளியே கலந்த இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர்.
அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வீட்டுக்குள் வந்த சண்முகம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மாமா மரியாத மனசில இருந்தா போதும் என சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறார். மேலும் முத்துப்பாண்டியையும் உட்கார சொன்ன அவன் ரத்னா கழுத்துல தாலி கட்டிட்டு இதே மாதிரி உன் வீட்டில் வந்து உட்காருவேன் என சவால் விடுகிறான்.
Anna Serial Update
அடுத்து தட்டில் பணத்தை வைத்து சண்முகத்திற்கு கொடுத்து சாப்பிட கூப்பிட வேண்டும் என்ற பழக்கத்திற்காக பாக்கியம் அதை ஏற்பாடு செய்து சௌந்தரபாண்டியை கொடுப்பதற்காக அழைக்க அவர் வர மறுத்து தட்டை தட்டி விட சரி ஆசிர்வாதம் பண்ணிட்டீங்க நானே கொடுத்து சாப்பிட சொல்றேன் என சொல்லி சண்முகத்திடம் கொடுத்து சாப்பிட கூப்பிடுகிறார்.
பரணி மற்றும் சண்முகம் இருவரும் சாப்பிட உட்காரு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.