கிரகங்களின் தளபதியின் செவ்வாய் சுமார் 18 மாதங்களில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் இருக்கிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை 3:40 மணிக்கு செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு உள்ளது.
மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சரிக்க போவதால் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றமும் வாழ்வில் வளமும் கிடைக்கும் அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. உங்களது தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிப்பதை காண்பீர்கள். உங்களது எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்களது தொழில் முன்னேற்ற மற்றும் வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரிகள் விரிவாக்க தான் நல்ல லாபம் கிடைக்கும். சொல்ல போனால் இந்த காலகட்டத்தில், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.