கார்த்திகை தீபம் சீரியல்: காட்டிக்கொடுத்த டாட்டூ; வசமாக சிக்கிய ரம்யா; கார்த்திக் எடுக்கப்போகும் ஆக்‌ஷன் என்ன?

Published : Jun 08, 2024, 04:23 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மேஜிக் பேனாவால் எழுதப்பட்ட லெட்டர் என்பது தெரியவந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
கார்த்திகை தீபம் சீரியல்: காட்டிக்கொடுத்த டாட்டூ; வசமாக சிக்கிய ரம்யா; கார்த்திக் எடுக்கப்போகும் ஆக்‌ஷன் என்ன?
Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் தீபாவிடம் யாரோ ஒருவர் ஒரு லெட்டரை கொடுக்க கார்த்திக் அந்த லெட்டரை கொண்டு வந்து போலீசில் கொடுக்க அது மேஜிக் பேனாவால் எழுதப்பட்ட லெட்டர் என்பதை தெரியவந்தது. இந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

24
zee Tamil Karthigai deepam serial

அதாவது, கார்த்திக் ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்டு அவளை பார்க்க வர ஐஸ்வர்யா மற்றும் ரியா இருவரும் சேர்ந்து தீபாவுக்கு நடக்கும் விஷயங்கள் பற்றி ஒரு ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கார்த்திக் சர்வர் ஒருவரை கூப்பிட்டு ரகசியமாக ஏதோ பேசி பணத்தை கொடுத்து அனுப்புகிறான். அந்த சர்வர் ஐஸ்வர்யாவிடம் இந்த பேப்பரை கொடுத்து பேனாவையும் கொடுத்து ஹோட்டல் குறித்து ரேட்டிங் குடுக்க சொல்லி சொல்கிறான். 

இதையும் படியுங்கள்... அண்ணா சீரியல் : கடைசி நேரத்தில் தர்மகத்தா தேர்தலில் இருந்து ஜகா வாங்கும் ஷண்முகம்... காரணம் என்ன?

34
Karthigai deepam serial Update

ஐஸ்வர்யாவும் எழுதிக் கொடுக்க சர்வர் என்ன மேடம் எதுவுமே இல்ல என்று கேட்க ஐஸ்வர்யா எழுதினேனே என்று சொல்கிறாள். பிறகு அந்த சர்வர் சாரி மேடம் நான் தான் மேஜிக் பேனாவை கொடுத்துட்டு இருக்கேன் என்று சொன்னதும் ஐஸ்வர்யா அதை ஆச்சரியமாக வாங்கி பார்க்க கார்த்தி இந்த லெட்டரை கொடுத்தது ஐஸ்வர்யா இல்லை என்பதை உறுதி செய்கிறான். பிறகு வீட்டுக்கு வர தீபா கை வலியில் தவிக்க கார்த்திக் அவளுக்கு கையை பிடித்து விடுகிறான். 

44
Karthigai deepam serial Today Episode

அடுத்த நாள் ஆபீஸ் வர ரம்யா மோதிரத்தை கொடுக்க அப்போது கார்த்திக் கையில் இருக்கும் டாட்டூவை பார்க்கிறான். மீனாட்சி அனுப்பிய போட்டோவிலும் இதே டேட்டூ இருப்பது கார்த்திக்கு ஞாபகம் வருகிறது. இதனால் வீட்டுக்கு வந்த கார்த்தி தீபாவிடம் உங்க பிரண்டை வர சொல்லுங்க ஒருநாள் நேர்ல பார்க்கலாம் என்று சொல்ல தீபாவும் ரம்யாவை வர சொல்கிறாள். கார்த்திக் வர சொன்னதாக ரம்யாவிற்கு தெரிய வந்ததும் அவள் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஒரு வாரம் ஆகியும் ஓயாத கூட்டம்.. சூரியின் கருடன் படத்தால் கப்சிப்னு ஆன மோகனின் ஹரா - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories