ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Published : Jul 05, 2024, 12:03 PM ISTUpdated : Jul 05, 2024, 12:06 PM IST

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும், 'கல்கி 2898 AD' படத்தின் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

'மகாநடி' பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கடந்த 27-ஆம் தேதி வெளியான 'கல்கி 2898 கிபி ' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

26

கீர்த்தி சுரேஷை வைத்து, சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படம் 'கல்கி 2898 AD'.

Poova Thalaya: அடிமட்டத்திற்கு போன TRP..! ஆரம்பித்த வேகத்தை முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி..!
 

36

கடன்ஹட்ட ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான இப்படத்தில், பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 

46

சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர்  ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

செண்பகமே.. செண்பகமே பாடல் நிஷாந்தியா இது? 54 வயதில்... ஹாலிவுட் ஹீரோயின் போல் கவர்ச்சியில் அலறவிடும் போட்டோஸ்
 

56

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் சுமார், 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை தமிழகத்தில் மட்டும் 'கல்கி 2898 AD' திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 

66

இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 'கல்கி 2898 கிபி' திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

தியா - திலான் திருமண வரவேற்ப்பில்.. சைடிஷுடன் சரக்கையும் ரிட்டர்ன் கிஃப்டாக கொடுத்து அசத்திய குடும்பத்தினர்!

Read more Photos on
click me!

Recommended Stories