எட்டிப்பார்க்கும் இடையழகை காட்டி.. பட்டுச்சேலையில் திகட்டாத கவர்ச்சியுடன் திமிறி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்..!

First Published | Dec 24, 2023, 4:05 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சேலையில் இடையழகு தெரிய நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

iswarya menon

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் அமலா பாலின் தோழியாக நடித்த இவர், இதையடுத்து ரோஜாவுடன் ஆப்பிள் பெண்ணே, சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்தார்.

Actress iswarya menon

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த வீரா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா. இதன்பின்னர் அதே ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.

Tap to resize

iswarya menon photos

பின்னர் சுந்தர் சி தயாரிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு திரைக்கு வந்த நான் சிரித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

iswarya menon hot photos

நான் சிரித்தால் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஐஸ்வர்யாவுக்கு பிற மொழிகளிலும் பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் தெலுங்கில் ஸ்பை என்கிற திரைப்படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக நடித்து டோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா மேனன். அடுத்ததாக மலையாளத்தில் பசூகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

iswarya menon in saree

நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 30 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளையில் அள்ளி வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

iswarya menon christmas special photos

அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பட்டுச்சேலையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் இடையழகை காட்டி சற்று கவர்ச்சி தூக்கலாக ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு விழா... சர்ப்ரைஸாக ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

Latest Videos

click me!