அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!

Published : Jun 20, 2024, 07:51 PM IST

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அறிந்து 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்... இதுகுறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய ஆவேசத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.  

PREV
14
அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த  பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!
Kallakurichi

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தான் தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 70-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை கூடுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

24

கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50000 நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் கலந்த விஷச் சாராய உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கதறும் மக்கள்... முதல் ஆளாக விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காண கள்ளக்குறிச்சி விரைகிறார் விஜய்!
 

34
Kallakurichi

அரசியல் வாதிகள், தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று... விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நலனை கேட்டு அறிந்து... அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதே போல் உயிரிழந்தோரின் சடலங்களை ஒரே இடத்தில் எரிக்கவும், புதைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வீடியோ வெளியானது. தளபதி விஜய்யும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 

44

இந்நிலையில் எப்போதும் சமூக கருத்து கொண்ட, விஷயங்களை பேசும் ஜிவி பிரகாஷ்.. "காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த  பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை' என பதிவிட்டுள்ளார்.

ப்ரீ வெடிங் நிகழ்ச்சியில்.. ராதிகாவுடம் ரொமான்ஸ் செய்த ஆனந்த் அம்பானி ! பலரும் பார்த்திடாத Unseen போட்டோஸ் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories