வேளாங்கண்ணி கோயில் - சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி மும்பை,சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் (ரயில் எண் 06070) நெல்லையிலிருந்து-சென்னை எழும்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ நெல்லை
சென்னையில் இருந்து நெல்லைக்கு ( ரயில் எண் 06069 )வாராந்திர ரயில் சேவையானது ஆகஸ்ட்ட் 23ஆம் தேதயில் இருந்து செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி ஒரு பெட்டியும், மூன்றடுக்கு ஏசி 6 பெட்டியும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 7, முன்பதிவு செய்யப்படாத பெட்டி 4 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு இல்லாமலே நல்ல லாபம்.. வீட்டிலிருந்து எப்படி கூடுதல் வருமான ஈட்டலாம்?
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
மற்றொரு சிறப்பு ரயில் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பில் (ரயில் எண் 06037) சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலானது ஆகஸ்ட் 23ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 8 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல (ரயில் எண் 06038) வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கான வாராந்திர சிறப்புரையிலானது ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகுவும் கூறப்பட்டுள்ளது இந்த சிறப்பு ரயிலில் 14 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்- ரயில் சேவை நீட்டிப்பு
சஅடுத்ததாக ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் 06051-06052) சேவையானது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 4ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், மூன்றடுக்கு ஏசி 3, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி 6, முன்பதிவு செய்யப்படாத வெற்றி 7 இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கிய இருப்பதாகவும் தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடி தூள்.! ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி