கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தில் கமலுடன் சிம்பு, அபிராமி, திரிஷா, ஐஸ்வர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.