9 வயதில்... பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய 'அரண்மனை 4' பட குழந்தை நட்சத்திரம்! குவியும் வாழ்த்து!

Published : Jul 29, 2024, 07:57 PM IST

அரண்மனை 4 படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான, தேவ நந்தா தன்னுடைய 9 வயதிலேயே, சுமார் 30 லட்சம் மதிப்பு கொண்ட காரை வாங்கி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
15
9 வயதில்... பல லட்சம் மதிப்புள்ள கார் வாங்கிய 'அரண்மனை 4' பட குழந்தை நட்சத்திரம்! குவியும் வாழ்த்து!

திறமை இருந்தால் வாய்ப்புகளும், பாராட்டுக்களும் தேடி வரும் என்பதற்கு திரையுலகில் ஏராளமான நட்சத்திரங்களை உதாரணமாக காட்டலாம். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் யோகி பாபு, சூரி, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் வரை அனைவரும் தன்னுடைய திறமையை மட்டுமே திரையுலகில் விதையாய் விதைத்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர்கள்.

25

எப்படி திறமை இருந்தால் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ... அதை போல் குழந்தை நட்சத்திரங்களையும் வாரி அனைத்து கொள்கிறது தென்னிந்திய சினிமாக்கள். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு,  தோட்டப்பன் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் தேவ நந்தா.  இதைத்தொடர்ந்து, மை சாண்டா, மின்னல் முரளி, ஹெவன், தி டீச்சர், போன்ற பல படங்களில் நடித்தார்.

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

35

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு இவர் உன்னி முகுந்தனுடன் நடித்த 'மல்லிகாபுரம்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் தேவ நந்தாவின் நடிப்பும் அதிகம் கவனிக்கப்பட்டது. தற்போது வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு மிகாமல் நடித்து வரும் தேவ நந்தா தமிழில் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வெற்றி கிளப்பில் இணைந்த அரண்மனை 4 படத்தில் நடிகை தமன்னாவின் மகளாக, தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

45

இதை தொடர்ந்து தெலுங்கில் பாக் என்கிற திரைப்படத்திலும், மலையாளத்தில் கு என்கிற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தன்னுடைய 9 வயதிலேயே மிகவும் ஸ்டைலிஷ் ஆன டொயோட்டோ இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கி உள்ளார். கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த இனோவா ஹைகிராஸ் காரை... இவரின் குடும்பமே காருக்கு மேட்ச் ஆக கருப்பு நிற உடை அணிந்து, ஷோரூமில் இருந்து பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தேவ நந்தா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமலை உதாசின படுத்திய ஸ்ரீவித்யா.! இருவருக்கும் நடந்த பிரச்சனை இதுதான்? திடீர் முடிவால் திசைமாறிய வாழ்க்கை!

55

9 வயது ஆகும் தேவ நந்தா...  வாங்கியுள்ள கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த காரில், எலக்ட்ரானிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 186 பிஹெச்பி  வரை இயக்க ஆற்றலை இன்னோவா ஹைகிராஸ் காரில் பெற முடியும். மையில்ட் ஹைபரீட்  மற்றும் ஸ்ட்ராங் ஹைபரீட் என இரண்டு விதமான எஞ்சின் இந்த காரில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் சீவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories