Reshma : சின்னத்திரை to வெள்ளித்திரை.. மின்னும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி - ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First Published | Apr 16, 2024, 1:24 PM IST

Actress Reshma Pasupuleti : கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான "லவ்" என்கின்ற நாடகத்தின் மூலம் தனது கலை பயணத்தை துவங்கிய நடிகை தான் ரேஷ்மா. இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

Reshma Pasupuleti

வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, துவக்க காலத்தில் சாஃப்ட்வேர் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்தார்.

விஜய், அஜித் மட்டும் மிஸ்ஸிங்... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்ட ஷங்கர் மகளின் Reception போட்டோஸ் இதோ

Actress Reshma

அதன் பிறகு சின்னத்திரை நாடகங்களில் அறிமுகமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மசாலா திரைப்படம்" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்பொழுது வரை மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். 


Actress Reshma Salary

இந்த நிலையில் அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு பேட்டியில் பேசும் பொழுது, அவரிடம் சம்பள விவரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "என் உதவியாளருக்கு நான் மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகிறேன். தற்பொழுது ஒரு நாளுக்கு ஒரு லட்சம் என்று, என்னிடம் கேட்கப்படும் கால் சீட்டுக்கு தகுந்தார் போல சம்பளம் பெற்று வருகிறேன்" என்று ஓபனாக கூறி உள்ளார்.

Vijay Wife: விஜய் இன்றி தனியாக வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சங்கீதா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Latest Videos

click me!