Flash Back: ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷாவின் நெக்லஸ்! வாங்கி கொடுத்தது யார்? பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

Published : Jul 18, 2024, 06:30 PM ISTUpdated : Jul 18, 2024, 07:11 PM IST

நடிகை த்ரிஷா வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐடி ரெய்டு நடந்ததாகவும், இதில் கணக்கில் வராத பணம் மற்றும் பத்திரங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும், குறிப்பாக ரூ.1 கோடி நெக்லஸை வாங்கி தந்தது விஜய் என த்ரிஷா கூறியதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.  

PREV
17
Flash Back: ஐடி ரெய்டில் சிக்கிய த்ரிஷாவின் நெக்லஸ்! வாங்கி கொடுத்தது யார்? பிரபலம் கூறிய ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் த்ரிஷா. திரையுலகில் நடிக்க துவங்கிய காலத்தில், ஹீரோயினின் தோழி போன்ற வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், பின்னர் இயக்குனர் அமீர் இயக்கிய 'மௌனம் பேசியதே' படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார்.

27

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய காலங்களில், த்ரிஷாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'சாமி' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் அப்படியே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கிய த்ரிஷா, தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழியிலும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனரால் தேடப்படும் நாயகியாக மாறினார்.

சூடாமணியை அம்மான்னு கூப்பிட்டு ஷாக் கொடுத்த இசக்கி..! சௌந்தரபாண்டிக்கு கிடைத்த பல்பு - அண்ணா சீரியல் அப்டேட்!
 

37

த்ரிஷாவிற்கு கடந்த 2015-ஆம் ஆண்டே, தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அதிரடியாக திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். திருமணம் நின்றதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை த்ரிஷா உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தெரிவிக்கவில்லை.
 

47

20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வரும் த்ரிஷா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து 'லியோ' படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் லிப் லாக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் த்ரிஷாவுடன் சேர்ந்து நடித்தது தான் விஜய் - சங்கீதா இருவருக்கும் இடையே சண்டை வர காரணம் என கூறப்பட்டது.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சிம்பிள் பட்டு பட்டு சேலையில் செப்பு சிலைபோல் ஜொலிக்கும் சினேகா!
 

57

அதே போல் விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயம் ஒருபுறம் பற்றி கொண்டு எரிந்தாலும், விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதே போல் இந்த தகவலை விஜய் - சங்கீதா மறுக்காத நிலையில், உறுதி செய்யும் விதமாக விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாகவே சென்று வருகிறார்கள்.
 

67

இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா வீட்டில் நடைபெற்ற ஐடி சோதனையில் கணக்கில் வராத, பணம் மற்றும் நகைகள் சிக்கியதாகவும்... குறிப்பாக த்ரிஷாவின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வைர நெக்லஸுக்கு அவரிடம் எந்த ஒரு கணக்கும் இல்லாததால், இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது அது நடிகர் விஜய் தனக்கு பரிசாக வாங்கி கொடுத்தது என த்ரிஷா கூறியதாக பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.

குடிப்பழக்கம் இல்லாத மற்றும் குடியில் இருந்து மீண்ட 6 முன்னணி பிரபலங்கள்! யார் யார் தெரியுமா!
 

77
Trisha Krishnan

மேலும் விஜய் த்ரிஷாவுக்கு இந்த வைர நெக்லஸை போல் பல பரிசுகளை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஒருபுறம் விவாகரத்து விஷயம் புகைந்து கொண்டிருக்க, இவர் இப்படி கூறியுள்ளது, கோலிவுட் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் த்ரிஷாவிடம் 1.16 கோடி அபராதம் கேட்டு வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories