இதுக்கு மேல வேற என்ன வேணும்..? மனைவி கொடுத்த மிகப்பெரிய சர்பிரைஸ்.. திக்குமுக்காடி போன யுவன்!!

First Published | Sep 1, 2021, 3:52 PM IST

இளம் ரசிகர்களுக்கு பிடித்தபோல் தன்னுடைய ஒவ்வொரு பாடலின் இசையையும், மெருகேற்றிவரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், யுவனுக்கு சூப்பர் சர்பிரைஸ் கொடுத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார் அவரது மனைவி. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

yuvan shankar raja

தற்போதைய ட்ரெண்டிங் இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
 

தன்னுடைய கணவருக்கு அவரே எதிர்பார்க்காத ஒரு சிறப்பான பிறந்தநாளை இந்த பிறந்தநாளை மாற்றி அமைக்க, பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட பார்ட்டியை ஏற்பாடு செய்து யுவனுக்கு அவரது மனைவி ஸாஃப்ரூன் நிசா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

Tap to resize

yuvan shankar raja

இந்த பார்ட்டியை யுவன் மனைவி சென்னை அண்ணா நகரில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், டின்னர் சாப்பிட வெளியே செல்லலாம் என அழைத்து சென்று திடீர் என இப்படி ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.  
 

yuvan shankar raja

இந்த பார்ட்டியில், சிம்பு, தனுஷ்,  ரவுடி பேபி பாடல் புகழ் தீ, சந்தோஷ் நாராயணன், பிக்பாஸ் ரைசா, விஜய் ஆண்டனி, தெருக்குரல் அறிவு, இயக்குனர் விஷ்ணு வரதன், நடிகர் அசோக் செல்வன், சுரேஷ் காமாட்,சி சிவி குமார், இசையமைப்பாளர் தரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 

yuvan shankar raja

முக்கியமாக பார்ட்டிக்கு வந்த சிம்பு மேடையில் ஏறி 'லூசு பெண்ணே லூசு பெண்ணே' பாடலை பாடி விட்டு, யுவனுக்கு தன்னுடைய வாழ்த்தை கட்டி அணைத்து கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
 

yuvan shankar raja

இவரை தொடர்ந்து தனுஷ் 'ரவுடி பேபி' பாடலை தீயுடன் சேர்ந்து பாடியுள்ளார். தெருக்குரல் அறிவு யுவன் ஷங்கர் ராஜாவுக்காகவே ஒரு பாடலை உருவாக்கி பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
 

மேலும் யுவன் பாடி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பல பாடல்கள் பார்ட்டியை மேலும் குதூகலமாகியுள்ளது. இறுதியாக யுவனுக்கு மேடையிலேயே மிக பிரமாண்ட கேக் ஒன்றையும் வெட்டி... இந்த பிறந்தநாளை கணவர் யுவனின் மறக்க முடியாத பிறந்தநாளான  மாறியுள்ளார் அவரது மனைவி. இந்த பார்ட்டி குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!