'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து 'தீபா' விலக இது தான் காரணமா? அவரே வெளியிட்ட தகவல்!!

First Published | Sep 15, 2021, 3:47 PM IST

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் இப்போது தான் சூடு பிடித்து வந்த நிலையில், திடீர் என இந்த சீரியலை விட்டு அவர் விலகியுள்ளார். ஏன் விலகுகிறார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

ஏற்கனவே இந்த சீரியலில் மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என மூன்று ஜோடிகள் உள்ள நிலையில் உள்ள கடைக்குட்டி கண்ணனுக்கும் காதல் திருமணம் முடிந்துவிட்டது. இதுவரை குடும்ப சென்டிமெண்ட் உடன் போய்க்கொண்டிருந்த சீரியலில் அதிரடி மாற்றங்கள் ஆரம்பமாகியுள்ளது. 

Tap to resize

தற்போது கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த காதல் திருமணம் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஹாட் டாபிக். 

இவர்கள் தனியாக வந்த பின்னர் படும் கஷ்டங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதையே உறைய வைக்கும் விதமாக இருந்தது. மேலும் இவர்களுக்கான தனி ரசிகர்கள் கூட்டமும் தற்போது தான் உருவாகி வந்தது.
 

இந்நிலையில் கண்ணனுக்கு ஜோடியாக 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபா திடீர் என மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில். அதற்க்கு வாய்ப்பே இல்லை என்பது போன்ற கருத்துக்களும் நிலவியது.
 

பின்னர் தற்போது தீபா கதாபாத்திரத்தில் நடித்து வருபவருக்கு பதிலாக சாய் காயத்தி நடித்து வருவது உறுதியானது. எனவே ரசிகர்கள் பலர் தொடர்ந்து, தீபாவிடம் இந்த சீரியலை விட்டு விலகுவது ஏன் என கேள்வி எழுப்பி வந்தனர்.
 

இதற்க்கு தீபா கொடுத்துள்ள பதிலில், அவருக்கு ஏற்கனவே முகத்தில் சில அலர்ஜி இருந்து வந்ததாகவும், ஷூட்டிங்கிற்காக மேக்அப் போட போட அது அதிகமாகியுள்ளது. மருத்துவர்கள் சில நாட்கள் இவர் மேக்அப் போட கூடாது என அறிவுறுத்தியதாலும், மேக்அப் போடாமல் நடிப்பை தொடர முடியாது என்பதாலும், இந்த சீரியலை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

Latest Videos

click me!