தனுஷின் குடும்பத்தில் இணைந்த இரண்டு செல்லங்கள்! மடியில் வைத்து கொண்டு அவரே வெளியிட்ட புகைப்படம்!

Published : Sep 01, 2021, 03:10 PM ISTUpdated : Sep 01, 2021, 03:11 PM IST

நடிகர் தனுஷ் குடும்பத்தில் தற்போது மேலும் இரண்டு பேர் இணைந்துள்ளனர். இந்த தகவலை தனுஷ், அவர்களது புதிய புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
தனுஷின் குடும்பத்தில் இணைந்த இரண்டு செல்லங்கள்! மடியில் வைத்து கொண்டு அவரே வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
 

27

இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில்,  'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.  மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலும் தனுஷின் எதார்த்தமான நடிப்புக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் என பல திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளனர். 
 

37

தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தனுஷ். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

47

இந்த படப்பிடிப்பை முடிந்து கொடுத்துவிட்டு, சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடித்து வந்த மாறன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.

57

தற்போது 'திருச்சிற்றபலம்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதை முடித்த பின்னர் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுத்திகிறது. 
 

67

இந்நிலையில் தனுஷ் தன்னுடைய குடும்பத்தில் இணைந்துள்ள இரண்டு செல்லங்களின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

77
dhanush

கிங் மற்றும் கோங் என பெயரிடப்பட்டுள்ள ஹஸ்கி ரக நாய் குட்டிகளை தனுஷ் வளர்க்க துவங்கியுள்ளார். மிகவும் கியூட்டாக இருக்கும் இந்த நாய் குட்டிகளை தன்னுடைய மடியில் வைத்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

click me!

Recommended Stories