நடிகை ரம்யா பாண்டியன், டம்மி டப்பாசு படம் மூலம் அறிமுகமானாலும் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தான் கவனம் பெற்றார்.
இதையடுத்து ஆண் தேவதை படத்தின் நடிகர் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்த இவர், ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.
சேலையில் இடுப்பழகு தெரிய அவர் நடத்திய அந்த மொட்டை மாடி போட்டோஷூட் வேறலெவலில் ரீச் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவரை இடுப்பழகி என செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ரம்யா பாண்டியன். அந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.
இதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர முடியாத நிலை நீடித்து வருவதால், தற்போது தனது போட்டோஷூட் பார்முலாவை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ரம்யா.
அந்த வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வரும் அவர் அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அதன்படி தற்போது ஆரஞ்சு நிற சேலையில் நடிகை ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.