தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், தன்னுடைய கியூட் நடிப்பு மூலம் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஜெனிலியா.
வெகுளித்தனமான நடிப்பு, புன்னகை பொங்கும் முகம், எந்த உடை அணிந்தாலும் நச்சுனு இருக்கும் உடல் கட்டு என இவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது இவரது நடிப்பு.
எனவே சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் அச்சாணி போட்டது போல் நிலைத்து விட்டார்.
தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் அனைத்துமே வேற லெவல்...
தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக திரையுலகை விட்டு விலகி இருந்த ஜெனிலியா மீண்டும் மெல்ல மெல்ல பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதற்க்கு அச்சாரம் போடுவது போல் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
தற்போது நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில், ஸ்ட்ராப் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்துள்ளது.
திருமணம் ஆகி, இரண்டு குழந்தை பெற்ற பிறகு கூட... இவ்வளவு அழகா? என ரசிகர்கள் தாறு மாறாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
என்றும் மாறாத புன்னகையோடு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே வேற லெவலுக்கு ரீச் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.