வர வர உடையை குறைக்கும் பிரியா பவானி..வெளிநாட்டில் ஹாட் பரப்பும் நாயகி

First Published Aug 13, 2022, 10:06 PM IST

டாப் 10 நாயகியாகிவிட்ட ப்ரியா பவானி சங்கர் தனது உடையை குறைத்துக் கொண்டு கவர்ச்சி போஸ்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் தற்போது நாவல்பழ நிறத்தில் ஷார்ட் உடை அணிந்து மனதை மயக்கியுள்ளார்.

priya bhavani shankar

சமீபத்திய முன்னணி நாயகியாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கடைசியாக ஹரி இயக்கிய யானை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த இவரது ரோல் வெகுவான பாராட்டுகளை பெற்றது.

priya bhavani shankar

மிக குறுகிய காலகட்டத்தில் டாப் டென் நாயகியான பிரியா பவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் மேயாத மான் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

priya bhavani shankar

முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதுகளைப் பெற்ற இவர் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படத்தில் நாயகியானார். பின்னர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்த பிரியா பவானி மாஃபியா அத்தியாயம் படத்திலும் தோன்றியிருந்தார்.

priya bhavani shankar

டைம் என்ன பாஸ் வெப் தொடரில் நடித்துள்ள பிரியா பவானி. பின்னர் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். தற்போது மீண்டும் எஸ் ஏ சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், ஜெயம் ரவி உடன் அகிலன் உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார்.

priya bhavani shankar

இதற்கிடையே இவர் நாயகியாக நடித்துள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் 10 தல, உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. படப்பிடிப்பிற்கு இடையே விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ள பிரியா பவானி சங்கர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகப்பணிதத்தில் வெளியிட்டு வருகிறார்.

priya bhavani shankar

முன்னதாக குட்டை உடை, ஜீன்ஸ்  என அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக இருந்தது. டாப் 10 நாயகியாகிவிட்ட ப்ரியா பவானி சங்கர் தனது உடையை குறைத்துக் கொண்டு கவர்ச்சி போஸ்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் தற்போது நாவல்பழ நிறத்தில் ஷார்ட் உடை அணிந்து மனதை மயக்கியுள்ளார்.

click me!