பாடகியுடன் காதலா?...முரட்டு சிங்கிள் பிரேம்ஜி கமிட் ஆகிட்டாரா?..இன்ஸ்டா ஸ்டோரி சொல்வது என்ன..

Kanmani P   | Asianet News
Published : Feb 09, 2022, 07:08 PM IST

 நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்" என தலைப்பிட்டு, பிரேம்ஜியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் வினைத்தா.

PREV
19
பாடகியுடன் காதலா?...முரட்டு சிங்கிள் பிரேம்ஜி கமிட் ஆகிட்டாரா?..இன்ஸ்டா ஸ்டோரி சொல்வது என்ன..
premji

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’சென்னை 28’, ’சரோஜா[’, ’கோவா’, ’மங்காத்தா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ மற்றும் ’ஜோம்பி’ படத்தில் இசையமைத்துள்ளார்.

29
preamji amaran

 தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் தனக்குத் தானே விதவிதமான பட்டங்களைச் சூட்டி மகிழ்ந்துகொள்ளும் அவர் ‘ஜோம்பி’படத்துக்கு தனக்கு ‘இசைக் காட்டேரி’என்று பயங்கர பட்டம் சூட்டுக்கொண்டுள்ளார்.

39
preamji amaran

ப்ரேம்ஜி தான் இன்னும் பேச்சுலராகவே இருப்பது குறித்து உற்சாகமாகவே உள்ள நிலையில், 42 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே என்று அவரைவிட அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். 

49
preamji amarang

2019 -ம் ஆண்டில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருமணமான புகைப்படத்துடன் ’கேம் ஓவர்’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்திருந்தார். அதனால் அவர் விரைவில் திருமணத்திற்குத் தயாராகிவிட்டார் என்று வாழ்த்து மழை பொழிந்தது.

59
preamji amarang

பின்னர் ‘ஜோம்பி’பட ஆடியோ வெளியீட்டு விழாவில்  இதுகுறித்துப் பேசிய  அவர் , ’கேம் ஓவர்’ என்ற டி-சர்ட் அணிந்து ஒரு பதிவிட்டேன். அதனால், என் பிரம்மச்சரியக் கதை முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில்  நிறைய பேரிடம் இருந்து வாழ்த்துகள் வந்தன. 

69
preamji amarang

பலர் என்னைத் தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கேட்டார்கள். உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நான்  இன்னும் நான் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்ற டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். எனக்கு யாரும் பெண் தருவார்கள் என்ற நம்பிக்கையில்லை எனவே நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான்’என்கிறார். என கூறியிருந்தார்..

79
preamji amarang

பின்னர் பிரேம்ஜி எந்த நடிகையும் போட்டோக்கு கமண்ட் செய்தாலும் அவருடன் காதல் என கிசுகிசுப்பு அவ்வப்போது வெளியாகிய வண்ணம் இருக்கிறது..

89
preamji amarang

இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி அமரன், 'ஆதலால் காதல் செய்வீர்' மற்றும் 'கில்லாடி' போன்ற படங்களில் பணியாற்றிய பாடகி வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

99
preamji amarang

அதற்கேற்ப வினைத்தா தான் பிரேம்ஜியிடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு எழுந்துள்ளது. "உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்" என தலைப்பிட்டு, பிரேம்ஜியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் வினைத்தா.

click me!

Recommended Stories