தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர்.
அப்போது ஐதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
ஐதராபாத் விமான நிலையத்தில் காதலி நயனை கரம் பிடித்து அழைத்து வந்த விக்னேஷ் சிவனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
பத்திரமாக சென்னை திரும்பிய விக்கி - நயன் ஜோடி செம்ம ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போட்டோ வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அலங்கரிக்கப்பட்ட அறையில் நயன்தாரா அட்டகாசமான கவர்ச்சி உடையில் கொடுத்திருக்கும் ரொமாண்டிக் போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.