முடிவுக்கு வராத ஹனிமூன்... கடலுக்கு நடுவே கவர்ச்சி உடையில் பல வகை உணவை பொளந்து கட்டும் காஜல்..!

First Published | Nov 24, 2020, 5:38 PM IST

ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி உடையில் விதவிதமான விருந்து சாப்பிடும் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
 

கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
Tap to resize

தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.
தற்போது ஆடம்பர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக காஸ்ட்லி ஹனிமூனை என்ஜாய் செய்து வருகிறார். இந்த ஹனிமூனுக்கு ரூ.40 லட்சத்தை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட அதை விதவிதமாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக கணவருடன் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படங்களை காஜல் வெளியிட லைக்குகள் தாறுமாறாக எகிறியது.
இதை தொடர்ந்து, இன்னும் முடிவுக்கு வராத காஜலின் ஹனிமூன் புகைப்படம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். அதில் கடலுக்கு நடுவே கவர்ச்சி உடையில் அமர்ந்து விதவிதமான உணவை ருசித்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் இவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!