கல்கி 2898 AD செய்த சம்பவம்.. சூர்யாவின் 350 கோடி பட்ஜெட் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?

Published : Aug 21, 2024, 02:10 PM IST

சூர்யா நடிப்பில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவிருந்த கர்ணன் படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கி 2898 படத்தின் வெற்றி மற்றும் அதன் கதையுடன் இந்த படத்தின் கதை ஒத்துப்போவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

PREV
17
கல்கி 2898 AD செய்த சம்பவம்.. சூர்யாவின் 350 கோடி பட்ஜெட் ட்ராப் ஆனதுக்கு இதுதான் காரணமா?
Suriya

பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா சூர்யா மற்றும் ஜான்வி கபூரை வைத்து கர்ணா என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கவிருந்தார். மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது.

27
Suriya Janhvi Kapoor

இதில் கர்ணனாக சூர்யாவும், திரௌபதியாக ஜான்வி கபூரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. கர்ணா படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக படக்குழுவினர் 15 கோடி ரூபாய் செலவிட்டனர். எக்ஸெல் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டடது.

37
Actor Suriya

மேலும் இந்த படம் தான் சூர்யாவின் முதல் நேரடி ஹிந்தி என்றும் அறிவிக்கப்பட்டது.  அலி ஃபசல், விஜய் வர்மா மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மற்றும் பல மொழிகளிலும் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

47
Suriya

ஆனால் இந்த படம் ட்ராப்பானதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் அடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கியதாகவும் தகவல் வெளியானது.

 

57
Kalki 2898 AD

இந்த சூழலில் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கல்கி 2898 படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து 1000 கோடி கிளப்பில் இடம் பிடித்தது.
 

67
Kalki 2898 Ad

சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவான கல்கி 2898 ஏடி படத்தின் மகாபாரதத்தின் இறுதிப் போரில் இருந்து தொடங்கி எதிர்காலத்தில் அதாவது தற்போதிருந்து 800 ஆண்டுகள் கழித்து 2800களில் நடக்கும் கதையாகும். இந்த படத்தில் மகாபாரத்தின் அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.

 

77
Kalki 2898 Ad

அதே நேரம் அர்ஜுனராக விஜய் தேவரகொண்டா கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதே போல் கர்ணனாக பிரபாஸ் நடித்திருப்பார். கல்கியின் அடுத்த பாகத்திலும் கர்ணன் தொடர்பான காட்சிகள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி 2 படத்திற்காக இதன் காரணமாகவே சூர்யா நடிப்பில் வெளியாகவிருந்த கர்ணன் படம் ட்ராப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

click me!

Recommended Stories