பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தற்போது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது நாம் அறிந்தது தான்.
இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஷங்கர், இயக்குனர் முத்தையா, அதிதி ஷங்கர், பழம்பெரும் நடிகர் சிவகுமார், படத்தின் நாயகன் கார்த்தி என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.பி.பி.எஸ் மருத்துவரான அதிதி ஷங்கர் இந்த படத்தை பக்கா மதுரை தமிழ் பேசும் பெண்ணாக, அதுவும் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்டுடுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால், இந்த படத்தின் மீதான எதிர்பாப்பும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தை தேர்வு செய்து இவர் நடிப்பதால், மாடர்ன் பெண்ணாக நடிக்க மாட்டாரோ என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில், இதற்கும் பதிலடி கொடுப்பது போல், தன்னுடைய தந்தை படத்தின் லோகோ வெளியீட்டு விழாவில், படு மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்து அசத்தினார்.
குறிப்பாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன், கருப்பு நிற ஸ்டைலிஷ் கவர்ச்சி உடையில் இவர் அணிந்திருந்த ஆடை தற்போது வரை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.